சிவபுராணம் பாகம் 38 – திருமால் உருவாக்கும் வித்தக புருஷர்

1166

பூதகணங்கள் கூறியவற்றில் இருந்து முப்புர த்தை ஆளும் அசுரர்களை அழிப்பதற்கான முறையானது திருமாலால் அறிய முடிந்தது. அதாவது அசுரர்கள் அனைவரையும் சிவ பூஜையை மறக்க ஏதாவது மாய வேலைகள் செய்ய வேண்டும்.

மேலும், அவர்கள் அனைவரும் தர்ம வழியை விடுத்து அதர்ம வழிக்கு சென்றால் மட்டுமே திரிபுரவேந்தர்களின் அழிவு என்பது ஆரம்ப மாகும் என்பதை உணர்ந்தார் திருமால். பின் பூதகணங்களை நோக்கி நீங்கள் அனைவரும் போகலாம் என்று கூறினார். பூதகணங்கள்யா வும் நொடி பொழுதில் அவ்விடத்தை விட்டுச் சென்றன.

பூதகணங்கள் யாவும் அவ்விடத்தை விட்டு சென்றதும் திருமால் தேவர்களை நோக்கி நீங்கள் அனைவரும் இணைந்து எம்பெருமா னான சிவபெருமானை எண்ணி தியானம் புரிந்து அவரின் ஆசிகளையும், அனுக்கிரக த்தையும் பெற வேண்டும்.

அவருடைய அனுக்கிரகம் இருந்தால் தான் நாம் எண்ணிய செயலை வெற்றியுடன் செய் து முடிக்க இயலும் என்று கூறினார் திருமால். பின்பு அங்கிருந்த தேவர்கள் அனைவரும் திருமாலிடம் விடைபெற்று சிவபெருமானை நோக்கி தியானம் புரிய சென்றனர்.

பின்பு திருமால் தனியாக தியான நிலையில் அமர்ந்தார். அவ்வேளையில் அவரிடத்தில் இருந்து மாய கலைகளில் வல்லவராக விளங்கக்கூடிய வித்தகனை உலக மக்களின் நன்மையை எண்ணி உருவாக்கினார்.

உருவான அந்த புருஷர் தன்னை படைத்த திருமாலை நோக்கி தான் என்ன செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய பிறப்பின் நோக்கம் எதுவானாலும் அதை சிரம் ஏற்று புரிவேன் என்று வணங்கி பணிந்து நின்றார்.

அப்புருஷனை நோக்கி திருமால் நீ என்னால் படைக்கப்பட்டவன். நான் இட்ட பணியை செ ய்ய நீ கடமைப்பட்டுள்ளாய் என்று கூறினார்.

திருமால் அந்த புருஷரிடம், வேதங்கள் யாவும் பொய்யோ, இவ்வுலகில் சொர்க்க, நரகங்கள் என்று எதுவும் இல்லை, இவையாவும் மெய்ய ன்று போன்ற சாஸ்திரங்களை என்னிடம் கற்றுத்தேர்ந்து, அதை இவ்வுலகம் முழுவதும் விரிவுப்படுத்தும் சக்தியையும் என்னிடமே பெற்று பலவிதமான மாய கலைகளை என்னி டத்தில் இருந்து பயின்று தேர்வு பெறுவாய்.

பின்பு உருவாதல், மறைதல், கவருதல், கவர்ந் தவற்றை இழத்தல், நண்பர்கள், காமம் மற்றும் எதிரிகள் என பலவிதமான கலைகளில் சிறந்து விளங்குவாய் என்றும், இக்கலையால் திரிபுர அசுரர்களை மயக்கி அவர்களை சிவ நெறியை விடுத்து உனது மாய கலைகளை பயின்று அவர்களின் அழிவு பாதைக்கு அழை த்து வருவாயாக என்று கூறி அந்த புருஷர்க ளை அனுப்பி வைத்தார்.

திரிபுர அசுரர்களுக்கு நீ கற்றுணர்ந்த இந்த சாஸ்திரத்தை கற்பித்து பின்பு பூவுலகிற்கு சென்று கலியுக காலம் தொடங்கும் வரையி லிருந்து, கலியுகம் தொடங்கிய பின்பு உன்னு டைய சிஷ்யர்களுக்கும், பிற சிஷ்யர்களுக்கும் இந்த சாஸ்திரத்தை ஓதுவித்து விரிவடையச் செய்வாய் என்று கூறினார்.

இப்பணியை நிறைவேற்றிய பின்பு மீண்டும் என்னை அடைவாய் என்று கூறி அந்த புருஷரை ஆசிர்வதித்து அனுப்பினார். மாய கலையில் வித்தகனான அப்புருஷன் நான்கு சிஷ்யர்களை படைத்து அவர்களுக்கும் இக்க லையை பயிற்றுவித்து பண்டிதர்களாக்கி பின்பு திருமாலை சந்திக்க சென்றனர். திருமா ல் அந்த நான்கு சிஷ்யர்களை கண்டு உங்கள் குருவை போல் சிறந்து விளங்குவீர்களாக என்று கூறினார்.

பின்பு சிஷ்யர்கள் அனைவரும் திருமாலை பணியும் வேளையில் அவர்களின் கரங்களை பிடித்து மாய ரூபியின் கரங்களில் கொடுத்து இவர்களையும் உன்னை போல் எண்ணி எந்நி லையிலும் கைவிடாது காப்பாற்ற வேண்டும் என்று கூறி நீங்கள் அனைவரும் எதிரிகளை வெல்பவன் என்று அழைக்கப்படுவீர்கள் என திருமால் ஆசி வழங்கினார்.

மாய கலைகளில் சிக்கும் வித்யுமாலி

திருமாலிடம் ஆசிப் பெற்ற மாய வித்தகர்கள் அவரிடம் விடைப்பெற்று சென்று திரிபுர
பட்டணங்களுக்கு அருகில் தங்களது வித்தை களை பிரயோகப்படுத்தி பரிசித்துக் கொண்டி ருந்தனர்.

அதனைக் கண்ட அசுரர்கள் இந்த விசித்திர கலையை தாமும் பயில வேண்டி, அவர்கள் பின்பற்றும் மதத்தில் இணைந்து போதனை பெற தொடங்கினார்கள். மாயாவிகளின் வலைகளில் சிக்கியவர்கள் தங்களது சுய அறிவினை இழந்து அவர்கள் சொன்ன வழி யில் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். காலங்கள் நகர இம்மாயாவிகளின் புகழும் இம்மதத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை யும் அதிகரிக்க தொடங்கின.

திருமாலை காண நாரதர் சென்ற போது அசுரர்களின் செயல்பாடுகளும், அதற்கான அழிவும் அதிகரித்துக் கொண்டே போகின்றன என கூறிக்கொண்டு இருந்த வேளையில், மாய வித்தகர்களின் குருவும், அவரின் சிஷ்ய ர்களும் திருமாலை காண வந்தார்கள்.

திருமால் இவர்களை கண்டதும் நாரதரிடம் இவர்கள் அனைவரும் என்னால் உருவாக்கப் பட்டவர்கள். தாரகாசுரனின் மைந்தர்களால் ஏற்பட்ட இன்னல்களை களையவும், அவர்கள் செய்து வரும் சிவபு+ஜையை தடுத்து அவர்க ளை அழிவு பாதைக்கு அழைத்து செல்லக் கூடியவர்கள் இவர்கள்தான்.

ஆகவே, இவர்களுடன் இணைந்து இவர்களு க்கு தேவையான உதவிகளை செய்து தருவா யாக என்று கூறினார் திருமால். திருமாலிடம் நாரதர் மற்றும் மாய வித்தகர்கள் அனைவரும் ஆசிப்பெற்று ஐவர் அறுவராக திரிபுர பட்டண ங்களுக்கு புறப்பட்டனர்.

நாரதர் திரிபுர பட்டணங்களில் முதலில் வித்யு மாலியின் பட்டணத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவரும் பட்டணத்தி ல் இருந்த வேந்தரின் அரண்மனையை அடை ந்ததும், மூன்று லோகத்திற்கு எவ்விதமான தடையுமின்றி செல்லக்கூடிய தேவ முனிவரா ன நாரதரை கண்டதும் அவரை வரவேற்று உபசரித்தார் வித்யுமாலி.

எந்தவிதமான செயலும் இன்றி தாங்கள் இவ்வளவு தூரம் என்னுடைய பட்டணத்தை அடைந்த காரணத்தை நான் அறியலாமா? ஏனென்றால் காரியம் இன்றி தாங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களே என்பதை நான் அறிவேன் என்றார் வித்யுமாலி.

அதற்கு நாரதர் காரியம் எதுவும் இல்லை வித்யுமாலி. நான் இவ்வழியாக சென்று கொண்டிருந்த போது இந்த பண்டிதர்களை சந்தித்தேன்.

இவர்கள் பகவத் சார்ந்த மதத்தின் கருத்துக்க ளை உங்களது பட்டணத்தில் பிரச்சாரம் செய்வதற்காக என்னிடம் உன்னுடைய பட்டணத்திற்கு வருவதற்கான வழியை கேட்டு யாசித்து நின்றனர்.

சரி நாம் போகும் வழியில் தானே உள்ளது என இங்கே அழைத்து வந்தேன் என்றார் நாரதர். நாரதர் கூறியதும் அவருடன் வந்த பண்டிதர்க ளை (மாய வித்தகர்கள்) அழைத்து வரவேற்று உபசரித்தான் வித்யுமாலி.

வேந்தரே! இந்த பண்டிதர்கள் சாதாரணமான வர்கள் அல்ல. இவர்களை காண்பது என்பது மிகவும் அரிதாகும். இவர்கள் இறைவன் மீது சிறந்த பக்தியை கொண்டவர்கள் என்று அங்கு வந்த பண்டிதர்களை பற்றி மிகவும் உயர்வாக கூறினார் நாரதர்.

நாரதர் எப்போதும் போல பணியை இனிதே செய்ய தொடங்கினார். அதாவது, இவர்களு க்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை. இவர்களை பற்றி அறிந்த நான் அந்த கணமே இவர்களிடம் சிஷ்யனாக சேர்ந்து உபதேசம் பெற்றுக் கொண்டேன் என்றும், நீயும் இவர்க ளிடம் உபதேசம் பெற்றுக்கொண்டால் உன்னு டைய புகழும், ஆட்சியும் மேலும் அபிவிருத்திய டையும் என்று கூறினார்.

செய்த கர்ம வினையானது செயல்பட தொட ங்கிய காரணத்தால் தேவ முனிவரான நாரதர் கூறிய கூற்றில் இருந்த உண்மையை உணர முடியாமல் பேராசை கொண்டு எதையும் சிந்தி க்க இயலாமல் அங்கு வந்த மாய கலைகளில் வித்தகர்களான பண்டிதர்களிடம் உபதேசம் பெற வேண்டி நின்றான் வித்யுமாலி.

அதாவது, வித்யுமாலி பட்டணத்தை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மக்கள் மற்றும் எதுவும் அறியா உயிரினங்களை கொன்று, அதனால் ஏற்பட்ட பாவ கர்மாக்களால் நிகழ்வது என்ன வென்று அறியாவண்ணம் அறிவுக்கூர்மை யை இழந்தான்.

மேலும், மாய கலைகளில் வித்தகர்களான ஐவருடன் ஜேஷ்டா தேவியும் திருமாலின் ஆணையினால் ஆயசபுரியினுள் (இரும்பினா ல் செய்யப்பட்ட பட்டணம்) நுழைந்தார்கள்.

பாவங்கள் செய்யும் அசுரர்கள்

மாய கலைகளில் வித்தகர்களான பண்டிதர்க ள் அசுர வேந்தனின் வேண்டுகோளை ஏற்று, அவர் விரும்பிய உபதேசத்தை வழங்க தொட ங்கினர். அதாவது, அவர்களின் வீழ்ச்சிக்கான பாதையை காட்டத் தொடங்கினர்.

பாவங்கள் செய்த அசுர வேந்தனின் மனம் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் தர்மத்தை இரு வேறு விதமான பொருளாக எடுத்துக் கூறினர். அதாவது, இறைவனை உருவ வழிபாடு செய்வதால் எந்தவிதமான பயனும் இல்லை என்றும், மேலும் உருவ வழிபாட்டின் போது மேற்கொள்ளும் பூஜை மற்றும் ஆராத னை போன்ற வழிபாடுகளால் பொருள் விரய ம் தான் உண்டாகுமே தவிர மற்ற எந்தவிதமா ன பயனும் இல்லை என்றும் கூறினர்.

இதுபோல இன்னும் பல வகைகளில் அசுர வேந்தனின் மனம் மகிழும் விதமாக பல கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். பண்டித ர்கள் எடுத்துக்கூறிய உபதேசத்தால் இதுவரை எம்பெருமான் மீது கொண்ட பற்று குறையத் தொடங்கின.

அசுர வேந்தன் பண்டிதர்களின் உபதேசங்க ளை வேத வாக்காக எண்ணினார். மேலும், இந்த உபதேசத்தால் நான் அடைந்த மகிழ்ச்சி யை போல், என் பட்டணத்தில் வாழும் குடிமக்க ளுக்கும் தாங்கள் உபதேசம் செய்ய வேண்டும் என்று பணிந்து நின்றார்.

பண்டிதர்களும் அதற்கு விருப்பம் தெரிவிக்க அசுர வேந்தன் உடனடியாக தனது மக்களுக்கு இவர்களின் பெருமைகளை எடுத்துக்கூறி இவர்களிடம் உபதேசம் பெற்று தீட்சை பெற வேண்டும் என ஆணையிட்டான்.

இவரது ஆணையால் அனைத்து அசுரர்களும் வித்தகரான பண்டிதருடன் வந்த சிஷ்யர்களா ல் உபதேசம் பெற்று தீட்சை பெற தொடங்கி னர். மேலும், தன்னுடைய பட்டணத்தில் மட்டு மல்லாது தன்னுடைய சகோதரர்களின் பட்டணங்களுக்கும் சென்று அங்கு அவர்களு க்கும் உபதேசம் வழங்கி தீட்சை அளிக்க வே ண்டும் என்று கூறி அவர்களை தன்னுடைய சகோதரர்களின் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தார் வித்யுமாலி.

வித்யுமாலியின் மற்ற இரண்டு சகோதரர்களி ன் பட்டணத்திற்கு சென்று அவர்களுக்கும் உபதேசமும், தீட்சையும் பண்டிதர்கள் அளித்து வந்தார்கள்.

பண்டிதர்களிடம் தீட்சை பெற்ற மன்னர்களும், மக்களும் எது உண்மை? எது பொய்? என்று அறியாவண்ணம் பாவங்களை செய்ய தொடங்கினார்கள். அதனால், அவர்களின் மூன்று கோட்டைகளுக்கும் அரணாக இருந்து அவர்களை பாதுகாத்து வந்த சிவபூஜையின் பலம் குறையத் தொடங்கின.

ஏனெனில், பண்டிதர்களிடம் தீட்சை பெற்ற அசுரர்கள் உண்மையான மெய்ப்பொருளை கண்டறிவதற்கான வழியை விடுத்து பாவங்க நிறைந்த வழியில் பயணிக்க தொடங்கினர். அதாவது, அறச்செயல்களான சிவபூஜைகள், யாகங்கள், தானங்கள் மற்றும் இறைவழிபாடு ஆகியவற்றை மறந்து அதர்மம் நிறைந்த செயல்களை செய்யத் தொடங்கினர்.

திரிபுர வேந்தர்கள் கடுந்தவம் புரிந்து, சகல சௌபாக்கியங்களுடன் நிறைந்த பட்டணங்க ளில் அறநெறியை தவறி அதர்ம வழியில் பயணித்தார்கள். மேலும், பண்டிதர்களுடன் ஜேஷ்டா தேவி குடியேறியதும் அங்கு வாசம் செய்துவந்த லட்சுமி தேவி அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றார்.

தனது ஞானப் பார்வையால் பட்டணங்களில் நிகழும் அதர்ம செயலை அறிந்த திருமால், இனி அவர்களின் அழிவை யாராலும் தடுக்க இயலாது என்றும், இதுவரை பூவுலகிலும், தேவலோகத்திலும் வாழ்ந்து வந்த உயிர்கள் அனுபவித்து வந்த இன்னல்கள் நீங்கும் காலம் வருவதை உணர்ந்தார்.

மேலும், தான் உருவாக்கிய மாய புருஷர்கள் அவர்களுக்கு அளித்த பணியை நன்முறை யில் செய்ததால் தான் எண்ணிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறப் போவதை எண்ணி மகிழ்ந்தார்.

பட்டணங்களில் இவ்விதம் நடைபெற்று கொ ண்டிருக்க தேவர்கள் எம்பெருமானை எண்ணி பல காலங்கள் தியானித்துக் கொண்டு இருந் தனர். அவர்களுடன் திருமாலும் இணைந்து எம்பெருமானை எண்ணினார்.

அவர்கள் செய்து வந்த சிவபூஜையும், அவர்க ளின் நாவில் இருந்து உச்சரித்துக் கொண்டிரு ந்த எம்பெருமானின் திருநாமமும், கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை அடைந்தது.

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி…
சிவபுராணம் நாளை தொடரும்…