சிவபுராணம் பாகம் 38

844

அசுரர்கள் என்றுமே அசுரர்கள் தான் என்பதை நிரூபிக்க தொடங்கினார்கள். அதாவது தாரகாசுரனின் மைந்தர்களால் பூவுலகில் உள்ள மானிடர்களின் அன்றாட கர்மாக்கள் பாதிக்கப்பட்டன. பூவுலகில் உள்ள இரும்பு பட்டணம் எவ்வேளையில் தம் மீது விழுமோ என்ற அச்சத்தில் அவரவர்களின் பணிகளை செய்யத் தவறினர்.

மேலும், மற்றபறக்கும் பட்டணங்களால் அனை த்து தேவர்களும் பாதிக்கப்பட்டனர். இதுவே அசுரர்களின் அழிவிற்கு காரணமானது. ஒரு நாள் தேவி தனது தோழிகளுடன் நீராடிக் கொண்டிருக்கும் போது சிவபெருமான் தேவி யை காண அவர் நீராடிக் கொண்டு இருக்கும் பகுதிக்கு சென்றார். அவ்வேளையில் வாயிலி ல் நின்று கொண்டிருந்த கணன் சிவபெருமா னை தடுத்து நிறுத்தினார்.

அனைத்தும் உணர்ந்த எம்பெருமான் தம்மு டைய திருவிளையாடலை தொடங்கினார். என்றும் இல்லாத புதிய அந்நியன் தன்னை நிறுத்தி தனது தாய் நீராடிக் கொண்டு இருக்கி ன்றார். அவரை இவ்வேளையில் தங்களால் காண இயலாது என்று கூறியதை கேட்ட எம்பெருமான் நான் யார் என்று நீ அறிவாயா? நானே சிவன் என்றார்.

உனது தாயாரின் கணவனும் நானே என்று சொல்லி உள்ளே செல்ல முற்பட்டார். ஆனால், கணன் தனது தண்டாயுதத்தினால் சிவபெரு மானை தடுத்தார். யாராக இருந்தாலும் அவர் சிவனாக இருந்தாலும் இவ்வேளையில் யாரையும் உள்ளே விடக்கூடாது என்பது எனது தாயாரின் உத்தரவாகும். சற்று நேரம் பொறு த்திருந்து தாங்கள் என் தாயை காணலாம் என்று கூறினார்.

கணனின் கூற்றுகளை கேட்ட எம்பெருமானு க்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. அவ்வே ளையில் அங்கு இருந்த சிவகணங்களை பார்த்து இந்த பாலகனுக்கு புரியும் வகையில் தகுந்த பாடங்களை கற்பியுங்கள் என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றார். எம்பெருமானி ன் ஆணைக்கு இணங்கி சிவகணங்கள் தண்டாயுதத்தோடு நின்றுக் கொண்டிருந்த கணன் அருகில் சென்றனர்.

கணனோ என் அருகில் வருவது என்பது தங்க ளுக்கு சிறப்பானது அல்ல என்று கூறினார். ஆனால், சிவகணங்களோ எங்களின் பலத்தை நீர் அறிய மாட்டாய் என்றும் உன் விளையாட்டு போதும் இங்கிருந்து புறப்படுவாயாக என்று கூறினார்கள்.

சிவகணங்களின் பேச்சுகளுக்கு செவி சாய்க்காமல் பயனற்ற பேச்சுகள் வேண்டாம் என் தாயின் உத்தரவின் படி யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கணன் கூறினார். இங்கு நானே காவல்காரன் ஆவேன். எனது கடமை யை நான் செய்கிறேன். எனவே இங்கிருந்து அனைவரும் ஓடி போவீர்களாக என்றார் கணன்.

கணனின் பேச்சுகளை கேட்ட சிவகணங்கள் எங்களை தாக்கும் வல்லமை உடையவரா நீ என கூறிக்கொண்டே அவனருகில் சென்றனர் அவர்களின் நோக்கத்தை அறிந்துகொண்ட கணன் அவர்கள் தாக்குவதற்கு முன்பாகவே தன் தாயார் கொடுத்த தண்டாயுதத்தால் சிவகணங்களை தாக்கினார்.

சற்றும் எதிர்பாராத இந்த சிறிய பாலகனின் தாக்குதலை எதிர்க்க முடியாமல் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தனர். இனி இந்த பாலகனை எதிர்ப்பது என்பது சாதாரண செயலாக தெரியவில்லை என்று நினைத்து சிவகணங்கள் சிவபெருமானிடம் சென்றனர்.

எம்பெருமானை கண்ட சிவகணங்கள் அவன் காண்பதற்கு சிறிய பாலகனாக இருந்தாலும் பலம் கொண்ட முரடனாக இருக்கின்றான். அவனை எங்களால் எதுவும் செய்ய முடியவி ல்லை என்று கூறி பணிந்து நின்றனர்.

சிவகணங்கள் கூறியதை கேட்ட நந்தி தேவர் ஒரு சிறிய பாலகனை உங்களால் வெற்றி கொள்ள முடியாமல் இங்கு வந்துள்ளீர்களே என சினந்து கூறிக் கொண்டே சிவகணங்களு டன் நந்தி தேவர் அந்த பாலகன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்.

நந்தி தேவர் தலைமையில் சிவகணங்கள் வருவதை கண்ட கணன் ஒரு கணப்பொழுதி ல் திடுக்கிட்டாலும் மனதில் தனது தாயை எண்ணி தியானித்தார். தாயே தாங்கள் இட்ட பணியை மட்டுமே நான் செய்து வருகிறேன்.

ஆனால், என்னுடைய கடமையை செய்வதில் இடையூறாக சிவகணங்கள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரை யும் எதிர்க்கும் சக்தியை தாங்கள் தான் எனக்கு அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்.

நந்திதேவருடன் வந்த சிவகணங்கள் கணனை சுட்டிக்காட்ட அவருடன் இருந்த மற்ற கணங்களும், நந்தி தேவரும் மிகுந்த கோபத்து டன் கணனை தாக்க முற்பட்டனர்.

ஆனால், அவர்கள் அனைவரும் இணைந்து தாக்க முற்பட்ட போது தன்னுடைய தாயை மனதில் எண்ணி அவர்களை தாக்க தொடங்கி னார் கணன். அதை சற்றும் எதிர்பாராத சிவகணங்கள் பாலகனின் ஒவ்வொரு தாக்குதலைக் கண்டும் பிரமித்து நின்றனர்.

கணன் தாக்கும் வேகத்தையும், அவனுடைய யு+க்திகளையும் கண்டு இவன் சாதாரணமான வனாக புலப்படவில்லை. இவன் ஒருவனே நம் அனைவரையும் சாதாரணமாக எதிர்த்து நிற்கின்றான்.

இவனை வெல்வது என்பது சுலபமாக தெரியவில்லை. இந்நிலை தொடர்ந்தால் சிவகணங்கள் அனைவரையும் இவன் வெற்றி கொள்வான் என்பதை உணர்ந்த நந்தி தேவர், இச்செய்தியை எம்பெருமானிடம் தெரிவிக்க வேண்டும் என எண்ணினார்.

உடனே, நந்தி தேவர் சிவபெருமானிடம் செ ன்று நிகழ்ந்த அனைத்தையும் தெரிவித்தார். நந்தி தேவர் மூலம் செய்தியை கேட்ட சிவன் மிகுந்த கோபம் கொண்டு சிவகணங்களை எதிர்க்கும் வல்லமை படைத்தவனா? அவனு க்கு பாடத்தை கற்பிக்க நானே வருகிறேன் என்று கூறி புறப்பட்டார்.

சிவபெருமான் மிகுந்த கோபத்துடன் செல்வ தை அறிந்த விஷ்ணுவும், பிரம்மாவும் அவரு டன் சென்றனர். மேலும், சிவகணங்கள் தாக்க ப்பட்டதை அறிந்ததும், தேவர்களின் வேந்தனா ன இந்திரனும் தேவர்களுடன் கணன் இருக்கும் இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டார்.

பார்வதி தேவி நீராடும் மண்டபத்திற்கு வெளி யே சத்தங்களும், கூச்சலும் ஏற்பட்ட வண்ணம் இருக்க தேவி தனது தோழிகளை அழைத்து நிகழ்வனவற்றை அறிந்து வருமாறு அனுப்பினார்.

தோழிகளும் வெளியே வந்து நிகழ்ந்த அனை த்து விஷயங்களையும் அறிந்து கொண்டனர். உடனே தோழிகள் தேவியிடம் சென்று அறிந்த அனைத்து செய்திகளையும் எடுத்து கூறினர்.

தோழிகள் பார்வதி தேவியிடம் கணன் தனக்கி டப்பட்ட பணியை நல்ல முறையில் செய்து வருகின்றார். சிவபெருமான் தங்களை காண வந்த போது அவரை தடுத்து நிறுத்தி தன்னு டைய தாய் நீராடச் சென்றதாகவும், சிறிது நே ரம் கழித்து தங்கள் அன்னையை காணலாம் எனவும் கூறியுள்ளார்.

ஆனால், கணனின் பேச்சைக் கேட்ட எம்பெரு மான் கோபம் கொள்ளவே தம்முடன் வந்த கணங்களை கொண்டு தகுந்த பாடம் கற்பிக் குமாறு கூறிச் சென்று விட்டார். சிவகணங்கள் மற்றும் நந்தி தேவர் என பலரையும் தாங்கள் அளித்த தண்டாயுதத்தைக் கொண்டே கணன் விரட்டி அனுப்பியுள்ளார்.

உடலில் பல காயங்கள் ஏற்பட்ட இந்நிலையி லும் தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி யதோடு இன்னும் எவரெல்லாம் உள்ளீரோ வாரீர் என மிகுந்த உத்வேகத்துடன் கூறுகின் றார். மேலும், பிரம்ம தேவரும், விஷ்ணுவும் இங்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

தோழிகள் கூறியதைக்கேட்ட பார்வதி தேவி மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டார் ஆனால், ஒரு சிறிய பாலகனிடம் மோதிய சிவ கணங்களின் செய்கையை நினைத்து மிகுந்த கோபம் கொண்டார். எனவே கணனின் பாது காப்பிற்காகவும், அவருக்கு துணையாகவும் இரண்டு சக்திகளை தம் மனதில் எண்ணி உருவாக்கினார்.

பார்வதி தேவி தான் உருவாக்கிய இரு சக்தி களிடமும் கணன் சிவகணங்களுடன் போர் புரிந்து கொண்டிருக்கின்றான். சிவகணங்க ளால் கணனுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படா வண்ணம் அவனுக்கு துணையாக இருந்து காத்து வர வேண்டும் என உத்தரவி னை பிறப்பித்தார்.

தன்னை உருவாக்கியவரின் உத்தரவினை ஏற்ற அச்சக்திகள் கணனுக்கு துணையாக இருப்போம் எனக் கூறி தேவியிடம் இருந்து விடைபெற்று சென்றன.

மும்மூர்த்திகளான சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர் கணனை காண புறப்பட்ட வேளையில் தன் தந்தையிடம் சென்று கார்த்தி கேயன் பணிந்து அவனை அழிப்பதற்கு தாங்கள் செல்ல வேண்டுமா? நான் சென்று வருகிறேன் என்று கூறி அனுமதி கேட்டார்.

சிவபெருமானும் கார்த்திகேயனின் விருப்ப த்தை ஏற்று சிவகணங்களை வென்று விட்டோம் என்ற எண்ணத்தில் நிற்கும் அந்த பாலகனுக்கு தகுந்த பாடங்களை புகட்டிவிட்டு வருவாயாக எனக்கூறி தன் புதல்வனை ஆசி கூறி அனுப்பினார்.

சிவகணங்களை தன் தாய் அளித்த தண்டாயு தத்தால் விரட்டி விட்ட கணன், வேலன் எதிரில் வருவதை கண்டு தயங்கி நின்றார். ஏன் என்றால் எதிரில் நிற்பவர் பார்வதி தேவியின் புதல்வன் அல்லவா?. இவ்வேளையில் நான் என்ன செய்யப்போகிறேன் என தன்னுடைய அன்னையை மனதில் எண்ணி குழம்பிய நிலையில் நின்று கொண்டிருந்தார்.

சிவகணங்கள் ஆறுமுகனின் வருகையை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டன. இனி கணனிற்கு தோல்வி என்பது உறுதியானது எனக் கூறினர். அவ்வேளையில் பார்வதி தேவி அனுப்பிய சக்திகளானது கணனிற்கு ஆதரவாக பெரிய உடலைக் கொண்டு பூதாகா ரமாக காட்சியளித்தன.

இதனைக் கண்ட சிவகணங்கள் இவன் ஒருவ னையே நம்மால் வெற்றி கொள்ள முடியவில் லையே, இதில் மேலும் இரண்டு பூதங்களா? என அஞ்சினார்கள். அவ்வேளையில் முருகப் பெருமான் அவர்களுக்கு வீரத்துடன் செயல் பட்டு அவனை வெற்றி கொள்ள வேண்டும் எனக்கூறி கணனை தாக்குவதற்கு பலவிதமா ன அஸ்திரங்களை அனுப்பினார்.

முருகப்பெருமான் அனுப்பிய அனைத்து அஸ் திரங்களும் கணனை அடைவதற்குள் அந்த பூதங்கள் தடுத்து அவைகளை விழுங்கின. கணனே அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஆறுமுகனுக்கு இது மிகவும் வியப்பான மற்றும் விசித்திரமான செயலாகவும் விளங்கியது. பலவிதமான முறைகளில் அதிக சக்தி கொண்ட அஸ்திரங்க ளை அனுப்பியும் அவை யாவும் பயனற்று போயின. ஒன்று கூட கணனை நெருங்க வில்லை.

இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பவைகள்யாவும் உணர்ந்தவர்களாக இருந்த மும்மூர்த்திகள் வினையின் அந்தப்பகுதியை கணன் நெருங்கி க்கொண்டு இருக்கின்றான். இனி நாம் செல்வதே இதற்கு உசிதமாகும் என்று கூறி கணன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்கள்.

திருமால், கணனிடம் செய்த செயலுக்கான தவறை அறிந்து மன்னிப்பு கேட்பாயாக என்று கூறினார். அதற்கு கணன் நான் என்னுடைய கடமையை மட்டுமே புரிந்துகொண்டு இருக்கி ன்றேன். இதில் என்னுடைய பிழைகள் ஏதும் இல்லை என்று கூறினான். மேலும், தன்னிடம் தன் அன்னையின் ஆசியும், சக்திகளையும் கொண்ட கணன் என்னை யாராலும் வெல்ல முடியாது. ஏன்?.. இந்த மும்மூர்த்திகள் இணை ந்தாலும் என்னை வெல்வது எளிதல்ல எனக் கூறினான்.

அவ்வேளையில் நாரதரோ அவன் சின்னஞ்சி று பாலகன், அவன் அறியாமையால் இதுபோன்று நடந்து கொள்கிறான் என்று கூறி மும்மூர்த்திகளுக்கு சாந்தம் வேண்டும் என்றும், மேலும் இந்த பாலகன் கொல்லப்பட வேண்டியவன் அல்ல என்றும் கூறினார்.

ஆனால், பாலகனின் கூற்றுகளே மும்மூர்த்தி களையும் சினங்கொள்ளச் செய்தன. பின் திருமால், ஆறுமுகனுக்கு துணையாக தனது சக்ராயுதத்தை அனுப்பி கணனுக்கு துணையா க இருந்த சக்திகளை அழித்தார். திருமாலோ நம்மிடம் பலம் இருக்கின்றது என எண்ணி அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. ஏனெனி ல், தம் பலமே சில தருணங்களில் நம்முடைய அழிவிற்கு அழைத்துச் செல்லும் பாலகனே அதை நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறினார். இருப்பினும் கணன் அதை பொரு ட்படுத்தாது இருந்தான்.

தனியாக நின்ற கணனோ என்னை வெல்வது என்பது எவராலும் இயலாத செயலாகும். என் அன்னையின் பரிபூரண ஆசியுடன் உங்கள் அனைவரையும் என்னால் வெல்ல இயலும் என்று இருமாப்பு கொண்டிருந்தான். இனியும் பொறுமைக்காத்தல் இயலாது என்பதை அறிந்த சிவபெருமான் உன்னுடைய மனதில் கொண்ட அகம்பாவம் அழிந்தால் நீ எல்லோ ராலும் போற்றப்படுவாய் என்றார்.

எம்பெருமானின் கூற்றுகளை ஏற்காத கணன் தனது தாயின் கணவரான எம்பெருமானிடம் தனக்கு இடப்பட்ட கட்டளையை மட்டுமே நான் செய்கின்றேன். என்னுடைய பணிக்கு இடை யூறாக யாராக இருப்பினும் அவரையும் நான் எதிர்த்து வெற்றி கொள்வேன் எனக்கூறி தண்டாயுதத்தை கையில் கொண்டு எம்பெரு மானையும் எதிர்க்க துணிந்தான்.

இனி எவரும் என்னை கடந்து செல்ல இயலா து என்று தண்டாயுதத்தை கையில் கொண்டு அங்கிருந்த எம்பெருமானான சிவபெருமா னை எதிர்த்து தன் கையில் இருந்த தண்டாயு தத்தை அனுப்பினார் கணன். சர்வ வல்லமை கொண்ட எம்பெருமானை நோக்கி அனுப்பப் பட்ட தண்டாயுதமானது அக்னியால் எரிந்து சாம்பலானது. அதைக் கண்ட கணனோ என்ன செய்வது என அறியாமல் நின்றான்.

இதுவரை பாலகன் என எண்ணி பொறுமைக் காத்த சிவபெருமான் இச்செயலால் மிகுந்த கோபம் கொண்டார். அத்தருணத்தில் எவரா லும் தடுக்க இயலாத வல்லமை கொண்டவரா கவும், தனது கரங்களில் இருந்த திரிசூலத்தை ஏந்தி கணனை நோக்கி அனுப்பினார். திரிசு+லமானது மிகுந்த தீ ஜவாலையுடன் சென்று கணப்பொழுதில் கணனின் சிரத்தை துண்டித்தது.

சிரம் இல்லாத உடலானது தரையில் வீழ்ந்தது. கணனின் வீழ்ச்சியானது சிவகணங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. தேவர்களும், சிவகணங்களும் சிவபெருமானை வணங்கி நின்றார்கள். ஆனால், எம்பெருமானோ அமைதியாகவே இருந்தார்…

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி…
சிவபுராணம் நாளை தொடரும்…