துருவன் கதை
(இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உள்ளது)
துருவன் நற்பதம் பெற்றிட உதவிய நாரதர் உத்தானபாதரிடம் சென்று அவன் முகவாட்டத்தின் காரணம் பற்றி வினவ, மன்னன் துருவனை விரட்டியது பற்றி வருந்திட, நாரதர் பகவான் அருள் பெற்ற துருவனைப் பற்றிக் கூறித் தேற்றினார். அப்போது காட்டிலிருந்து திரும்பி வந்த துருவன் தந்தையையும் தாய்மார்கள் இருவரையும் வணங்கினான். உத்தானபாதன் துருவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து அரசனாக்கி வைராக்கியம் மேற்கொண்டு வனத்திற்குச் சென்றான். துருவனும், அவனது தாயாரும் இறுதியில் திவ்ய பதத்தை அடைந்தனர்.
துருவனுடைய மகிமையை நாரத முனிவர் பிரசேதர்களுடைய யாகத்திலே புகழ்ந்து பாடினார். உண்மை தத்துவத்தை அறியாத மக்களுக்கு, பகவத் விஷயமான ஞானாம்ருதத்தைப் புகட்டுபவனுக்குத் தேவர்கள் அருள்புரிவார்கள் என்று விதுரருக்கு மைத்ரேயர் கூறினார். அடுத்து மைத்ரேயர் விதுரருக்குப் பிரசேதசர்களைப் பற்றிக் கூறினார்.
தொடரும்…
ஓம் க்ரிஷ்ணாய நமஹ!
