சுவாமி ஐயப்பன் வரலாறு 12

179

நேற்றைய தொடர்ச்சி….
வனத்திற்கு செல்லும் முன்பாக தனது குல தெய்வமான சிவனை வேண்டி, தனது மகன் எவ்விதமான இடையூறுமின்றி திரும்பி வர வேண்டும் என்று, சிவபெருமானுக்கு படைத்த முக்கண் கொண்ட தேங்காயை பயணத்தின் போது பசியாற்றுவதற்கான உணவுப் பொரு ளாக ஒரு துணியில் இரண்டு பக்கங்கள் வைத்து கட்டி மணிகண்டனிடம் கொடுத்தார். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தன. முடிச்சுகள் நன்றாக போடப்பட்டு இருந்தன.
பந்தள நாட்டின் எல்லைகளை கடந்து மணிக ண்டன் வனத்தில் நுழைந்தார். அவரின் வரு கைக்காக பல காலமாக காத்துக் கொண்டிரு ந்த இந்திராதி தேவர்களும், முனிவர்களும் மற்றும் பூதக்கணங்களும் அவ்விடம் வந்து அவரை வரவேற்றனர்.
மகிஷியை பற்றி அறிதல் :
மரங்கள் நிறைந்த அந்த வனத்திலுள்ள மலை யின் உச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, மணிகண்டன் அமர ஒரு ஆசனமும் உருவாக்கினார்கள். பின்பு, மணிகண்டனிடம் மகிஷி என்ற அரக்கியை பற்றியும் அவளால் ஏற்பட்டுள்ள இன்னல்களை பற்றியும் எடுத்து ரைக்க தொடங்கினார்கள்.
தேவாதி தேவர்களும், முனிவர்களும் ஒரு சிறுவனை அழைத்து அவனை பலவாறாக துதித்து அவனிடம் உரையாடிக் கொண்டிரு ப்பதை தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொண்டாள் மகிஷி. அதை அறிந்ததும் மிகுந் த கோபமும், வேகமும் கொண்டவள் தன் கண்ணில் பட்டதை யாவற்றையும் அழிக்கத் தொடங்கி தன்னிடம் உழைத்த ஒற்றர்களை யும் சரமாரியாக வசைப்பாடினாள். கோபத்தில் என்ன செய்கின்றோம்? என்ன நிகழப்போகிற து? என்பதை அறியாமல் மிகுந்த கோபமும் அவள் கண்களில் தென்பட்டது.
ஒரு சிறு பாலகன் என்னை கொல்வதா? நான் அவனை கண்ணிமைக்கும் நேரத்தில் கொன்று விடுவேன் என கோபத்தில் கர்ஜித்து என்னை எவராலும் வெல்ல இயலாது. எப்ப டை வந்தாலும் அப்படையை நான் அழித்து அப்பாலகனை கொன்று விடுவேன் என்றும்… அவன் ஒரு சிறு துரும்பென எதிரியின் பலம் அறியாது கோபத்தில் தனக்கு தோன்றியவற் றை கர்ஜித்து மணிகண்டன் இருக்கும் இடத்தை நோக்கி புறப்படத் தொடங்கினாள்.
மணிகண்டனை காணுதல் :
மகிஷி மணிகண்டன் இருக்குமிடத்தை அடை ந்து மணிகண்டனை கண்டாள். மணிகண்ட னை கண்டதும் நகைக்க தொடங்கினாள். அதா வது ஒரு சிறு பாலகன் என்னை கொல்வ தா? என்று எண்ணத் தொடங்கினாள். பாலக னே நீ… என்னை கொல்வதா? உனக்கு இவர்க ள் அளிக்கும் நம்பிக்கையால் உனது வாழ்நா ளை அழித்துக்கொள்ளாதே என்றும் இல்லை யேல் உனது உயிரை என் கரங்களால் மாய்த் துக் கொள்ளாதே. இங்கிருந்து புறப்பட்டு செல். இல்லையேல் என் கரங்களால் இன்று உனது உயிரானது காலனின் கையில் பிடித்து கொடுக்கப்படும் என்று கர்ஜித்தாள்.
மகிஷியின் கோபமான பேச்சுக்களை கேட்ட, மணிகண்டனோ எவ்விதமான சொற்களையும் உரைக்காமல் புன்னகையுடன் மட்டுமே காண ப்பட்டார். தனது பிறவியின் நோக்கத்தை தன் கண்முன்னால் கண்ட பின் அவர் அனைத்தும் உணர்ந்து கொண்டார்.
மணிகண்டன் புன்னகையை கண்டதும் மகிஷி யின் கோபம் எல்லைக்கு உட்படாமல் அதிகரிக்கத் தொடங்கியது. அவள் மிகுந்த ஆவேசத்துடன் இன்றுடன் உனது வாழ்வு முடிவுக்கு வரப்போகிறது என்று உரைத்து. அசுரர்களின் அனைத்து சேனைகளையும் தனது மாய சக்திகளால் தோன்றச் செய்தாள்.
யுத்தம் தொடங்குதல் :
அசுர சேனைகளை கண்டதும் தேவேந்திரனும், தேவர்கள் கொண்ட படைகளை தயார் நிலை யில் இருக்க ஆணையைப் பிறப்பித்தார். தேவர்கள் அனைவரும் போருக்கு தயாரான நிலையில் நின்று கொண்டிருந்தனர். தேவர் க்ள் மட்டுமின்றி பூதங்கணங்களும் போருக்கு தயாரான நிலையில் இருந்தனர்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே யுத்தமானது தொடங்க ஆரம்பித்தது. மகிஷியி ன் அசுர கூட்டமானது மிகுந்த ஆவேசத்துடன் அசுரத்தனமாய் தாக்கத்தொடங்கியது. தேவர் கள் படையும், பூதங்கணங்களும் இணைந்து அசுரர்களின் கூட்டத்தை எதிர்க்க தொடங்கி மணிகண்டனிற்கு மிகுந்த ஆதரவுடன் செயல் படத் தொடங்கின.
ஆயிரக்கணக்கான அசுர வீரர்களை மணிக ண்டனுடன் இருந்த தேவ மற்றும் பூதங்கண ங்கள் இணைந்து அவர்களை அழித்தப்படி முன்னேற்றம் அடைந்து கொண்டே இருந்தனர் மகிஷியின் அசுர படையானது காலம் கடக்க… கடக்க… அசுர வீரர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போகத் தொடங்கியது.
மணிகண்டனின் பலம் அறிதல் :
மகிஷியை நோக்கி மணிகண்டன் தனது பான ங்களை எய்துக்கொண்டே இருந்தார். இவரு டைய பானங்களுக்கு பதிலளிக்க இயலாத வகையில் மகிஷியின் செயல்பாடுகள் யாவும் அமைந்த வண்ணம் இருந்தன. ஏனெனில் வில் எய்தும் கலையில் வல்லவராயிற்று அல்லவா? மணிகண்டன்.
நாளை தொடரும்….
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…