சுவாமி ஐயப்பன் வரலாறு 15

1153

நேற்றைய தொடர்ச்சி..
மணிகண்டனுக்காக காத்திருக்கும் லீலாவதி:
மணிகண்டன் அருளிய ஆசியினால் மிகவும் மனம் மகிழ்ந்தாள் லீலாவதி. பின்பு இதுவே தனக்கான வரமாகவும், சாப விமோச்சனமாக வும் கருதி மனம் மகிழ்ந்து தன்னை திருமணம் செய்யும் காலத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்க தொடங்கினாள்.
தன் மனதிற்கு விருப்பமானவர்… அருகிலேயே இருந்து அவரைக்காணும் பாக்கியம் எவருக்கு கிடைக்கும்? என்று தன் மனதளவில் மிகவும் ஆனந்தம் கொண்டு, தன் திருமண வாழ்க்கை க்காக அனுதினமும் காத்துக் கொண்டிருக்கி ன்றார். லீலாவதியும் மனதார மணிகண்டனை வணங்கினாள். மணிகண்டன் லீலாவதியை ஆசிர்வதிக்க அவள் ஒளி வடிவமாக பிரபஞ்ச சக்தியில் ஆட்கொண்டாள்.
எம்பெருமான் வருகை தருதல் :
இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பன, யாவற்றை யும் எம்பெருமானும், திருமாலும் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்பு எம்பெருமான் ரிஷப வாகனத்தில் மானுடர்கள் வாழும் இந்த பூவு லகிற்கு வருகை தந்தார். பின்பு தனது ரிஷப வாகனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான் தனது ரிஷபத்தை ஓரிடத்தில் கட்டிப் போட்டதா ல் அந்த இடமானது இன்றைக்கும் ‘காளைக் கட்டி” என்று அழைக்கப்படுகின்றது.
(அதாவது ரிஷபம் என்பது காளையை குறிப்ப தாகும். எம்பெருமான் தனது வாகனமான காளையைக் கட்டிப்போட்டதினால் அந்த இடம் ‘காளைக்கட்டி” என்று அழைக்க படுகிறது.) அவ்விடத்தில் எம்பெருமானை கண்ட மணிக ண்டன் மற்றும் அனைத்து தேவர்களும், முனி வர்களும் எம்பெருமானை வணங்கி நின்றனர்
எம்பெருமான் மணிகண்டனை ஆசீர்வதித்து… பின்பு தன் பக்தனான பந்தளராஜன் உன்னு டைய வருகைக்காக காத்துக் கொண்டிருப்ப தாகவும், அவர் மனதில் உன்னைப் பற்றிய கவலை இருப்பதாகவும் கூறினார். அவரிடம் சென்று உனது அவதார நோக்கத்தை எடுத்து ரைத்து உனது பிறவிப் பலனை செய்வாயாக… என்று கூறி அருள் பாவித்தார்.
பெண் புலியாக மாறிய தேவேந்திரன்:
கல்லிடும் குன்று உருவாதல் :
அரக்கியான மகிஷியின் உடலில் இருந்து லீலாவதியின் ஆன்மா வெளியேறிய பின் அந்த உடலானது அவ்விடத்திலேயே இருந்தது சிறிது நேரத்திற்குப் பின்பு அவளது உடலான து பெரியதாக வளர தொடங்கியது. இப்படி நடப்பது அசுரர்களின் குணம் அல்லவா?
பின்பு மணிகண்டன் அருகிலுள்ள ஒரு குன்றி ல் அதாவது பாதாள உலகில் அவ்வுடலை அனுப்பி வைத்து அந்த அசுர உடலின் வளர்ச்சியையும், ஏதேனும் ஒரு சமயத்தில் உயிர்ப்பெற்று வராத பட்சத்தில் அவ்வுடலின் மீது கற்களைக் கொண்டும் மூடுவது என்று தீர்மானித்தார். பின்பு அவர் கற்களைக் கொண்டு அரக்கியின் உடலை மூட தொடங்கி யதை கண்ட தேவர்கள் அனைவரும் அவருக்கு உதவியாக கற்களை கொண்டு அந்த உடலை மூடினார்கள்.
(அவள் உடலின் மீது ஒரு மிகப்பெரிய கல்ம லை யே உருவாகி இருந்தது. மணிகண்ட சுவா மி கற்களைக் கொண்டு அரக்கியின் உடலை மூடிய இடமானது இன்றைக்கும் ‘கல்லிடும் குன்று” என்று அங்கு செல்லும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அந்த இடத்திற்கு செல்லு ம் பக்தர்கள் சிறுக்கற்களை வீசி விட்டுதான் மணிகண்டனை தரிசிக்க செல்வார்கள் என்னும் சம்பிரதாயமும் உருவாயிற்று என்கின்றது சபரிமலையின் ஸ்தல புராணம்).
அரண்மனைக்குச் செல்லுதல்:
தேவர்களின் வேந்தனான தேவேந்திரனிடம் சென்ற மணிகண்டன் தனக்கு இன்னொரு கடமையும் இருப்பதாக கூறினார். அதாவது எனது தாயார் மிகுந்த தலைவலியால் அவதி ப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு மருத்துவம் செய்ய புலிப்பால் தேவைப்படும் என்பதையும் எடுத்துரைத்து தனக்கு புலிப்பால் கிடைக்க உதவ வேண்டும் என்று கூறினார்.
தேவேந்திரனும், மணிகண்டனிடம் நீங்கள் ஒரு குவளையில் புலிப்பால் எடுத்துச் சென்றாலும் அதை அரண்மனையில் உள்ள அனைவரும் நம்ப மாட்டார்கள் என்றும், ஆகவே நாங்கள் அனைவரும் புலியாக மாறி அரண்மனைக்கு உங்களுடன் வருகின்றோம் என்றும் கூறினார்கள். தேவேந்திரன் ஒரு பெண் புலியாகவும், அவருடன் இருந்த மற்ற தேவர்கள் புலியாகவும் மாற, பெண் புலியின் மீது மணிகண்டன் வீற்றிருக்க, மற்ற புலிகள் மணிகண்டன் அமர்ந்திருந்த புலியை பின் தொடர்ந்த வண்ணம், அரண்மனை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார்கள்.
நாளை தொடரும்…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…