சுவாமி ஐயப்பன் வரலாறு 17

1410

நேற்றைய தொடர்ச்சி….
ஜோதி வடிவில் காட்சி – மகரசங்கராந்தி:
அங்கு குடியிருந்த அனைவரும் தேவர் பெரு மக்களையும், மணிகண்டனையும் மற்றும் மன்னரையும் பார்த்தனர். பின்பு மணிகண்டன் தன் பெற்றோரிடம் தனது பிறப்பு பற்றிய ரகசியங்களையும், அவதார நோக்கத்தையும் எடுத்துரைத்தார். மணிகண்டன் கூறிய யாவ ற்றையும் கேட்ட மன்னனும், மகாராணி யும் என்ன பாக்கியம் செய்தேனோ? என்று தனது கரங்களை கூப்பி மணிகண்டனின் பாதங்க ளில் விழுந்து வணங்கினார்கள்.
உன்னை இறைவன் அளித்த குழந்தை என்று நினைத்தேன். ஆனால், இறைவனே எங்களு க்கு குழந்தையாக அவதரித்திருக்கிறார் என்ப தை அறியும்போது இந்த பிறவியில் நாங்கள் செய்த புண்ணியமே என்று தங்களது மனதில் மனம் மகிழ்ந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின்பு நிதானத்திற்கு வந்த பந்தள மன்னன், எனக்கு இன்னும் ஒரு கடமை மீதம் உள்ளது. அது என்வென்றால் இந்த பந்தள தேசத்திற்குப் தங்களை நான் மன்னனாக பட்டம் சூட்ட வேண்டும் என்பதே அந்த கடமையாகும். அதை உடனே ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறினார். அவர் கூறவே, தாயும் அதை விரைவாக ஏற்பாடுக ளை தொடங்குங்கள் என்று கூறினார்.
மன்னிக்க வேண்டும் தந்தையே, என்னுடைய பிறவி நோக்கமானது இனிதே நிறைவுற்றது. இனி நான் தங்களுடன் இருக்க போவதில்லை என்றும் நான் புறப்படுவதாக கூறினார் மணி கண்டன். ஆனால், பந்தள மன்னன், மகனே இனி என்னால் உன்னை காண இயலாதா? என்று மனமுடைந்து தன் மகனிடம் கேட்டார். இல்லையேல் வருடத்தில் ஒருமுறையாவது நான் உன்னை காண வேண்டுமே அதற்காவ து தாங்கள் எனக்கு வரம் அளிக்க வேண்டுமெ ன்று வேண்டினார். தன்னை வளர்த்த தந்தை யின் வேண்டுகோளுக்கிணங்கி அவருக்கு அருள் பாவித்தார். நான் வருடத்தில் வரும் மகர சங்கராந்தியன்று ஜோதி வடிவத்தில் உங்களை காண வருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
காட்சி அளித்தல் :
இனி வருடத்தில் ஒருமுறை நான் தங்களுக்கு காட்சியளிப்பேன் என்றும், இனி வரும் நாட்க ளில் நான் மக்களை நல்வழிப்படுத்தவும் அவர் களுக்கு அருள் பாவிப்பதும் தானே முறையா கும். இந்த அகிலத்திற்கும், அகிலத்து மக்களு க்கும் இந்த பலனானது அடைய வேண்டும் அல்லவா? என்று தன் தந்தையிடம் உரைத்து எனக்கென்று தங்களின் ராஜ்ஜியத்தில் ஓரி டம் வேண்டும் என்று கூறினார். நான் அங்கிரு ந்து அனைத்து ஜீவராசிகளையும் காப்பேன் என்று கூறினார்.
மன்னனும் இந்த ராஜ்ஜியமே உன்னுடையது என்றும், இந்த ராஜ்ஜியத்தில் எந்த பகுதி வேண்டுமோ? அந்த பகுதியை நீ எடுத்துக்கொ ள்ளலாம் என்றும் கூறினார். ஆனால், எனக்கு ஒரு வரம் வேண்டும் என்றும் கூறினார். அதா வது பட்டாபிஷேகம் எப்போது நிகழ்ந்தாலும் அதற்கான ஆபரணங்களை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அவற்றை எல்லாம் வரு டத்திற்கு ஒரு நாளேனும் அணிந்து கொண்டு சிம்மாசனத்தில் அனைவருக்கும் காட்சி அளிக்க வேண்டும். இதுவே எனது, சின்ன விருப்பமாகும். இதை நிறைவேற்றித் தருவாயா? மணிகண்டா என்று கேட்டார்.
இடத்தினை தேர்ந்தெடுத்தல் :
மணிகண்டனும் அவ்விதமே ஆகட்டும் தந்தை யே என்று கூறினார். தனக்கான இடத்தை தனது ராஜ்ஜியத்திலிருந்து தேர்ந்தெடுக்க தொடங்கினார். அதாவது ஒரு மலையின் மீது இருந்து தனது வில்லினால் ஓர் அம்பினை எய்தார். அந்த அன்பு சென்றடையும் இடத்தில் எனக்கு ஒரு ஆலயம் நிறுவவேண்டும் என்றும் கூறினார். அந்த ஆலயத்தில் இருந்து என்னை விரதமிருந்து காண வரும் பக்தர்களுக்கு காட்சியளிப்பேன் என்று தனது தந்தையிடம் கூறினார்.
அம்பு காட்டிய இடத்தை மணிகண்டனும் மன்ன னும் பார்த்தனர். பின்பு பந்தள மன்னன் அவ்விடத்தை வணங்கி, அவ்விடத்தில் ஆலய ம் எழுப்ப தொடங்கினார். பின்பு மணிகண்ட னை அவ்விடத்தில் பார்த்தபோது அவர் அங்கு இல்லை. மணிகண்டன் தனது அவதார நோக்கத்தை முடித்த பின்பு சிவ-விஷ்ணுவுடன் ஒன்றிணைய புறப்பட்டிருந்தார்.
ஆலயம் எழுப்புதல் :
மணிகண்டன் இருக்கும் ஆலயத்தை எவ்விதம் அமைப்பது என்பது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார் மன்னன். எப்படி வடிவமைப்பது? எதன் அடிப்படையில் அமைப்பது என்று புரியாமல் குழம்பிய மனநிலையில் இருந்த பொழுது ஒரு அசரீரி ஒன்று உருவானது.
அந்த அசரீரி மூலம் மணிகண்டன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆலயமானது இவ்விடத்தில் எவ்விதம் உருவாக வேண்டும் என்றும், அந்த ஆலயத்தில் பதினெட்டு படிகளு ம் அமைத்தல் வேண்டும் என அசரீரி கூறியது.
படிகளின் விளக்கம் :
மன்னரோ… ஆலய அமைப்பை பற்றி நன்கு அறிந்து கொண்டார். இருப்பினும் அந்த பதினெட்டு படிகளின் விளக்கம் யாதென்று அந்த அசரீரியிடம் கேட்க தொடங்கினார். அசரீரியோ அந்த படிகளின் விளக்கத்தைப் பற்றி எடுத்துரைக்க துவங்கியது.
இந்த பதினெட்டு படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும் என தெரிவித்து அதை பற்றி கூற துவங்கியது.
முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.
இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.
மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.
நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.
ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.
ஆறில் இருந்து பதின்மூன்று படி வரை உள்ள எட்டு படிகளும், அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், கர்வம், போட்டி, பொறாமை, தற்பெ ருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.
பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதி னைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினா றாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும்.
இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம் பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடி யது இந்த மூன்று படிகள் என்றும், பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.
பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக் கும். அதாவது மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.
இந்த பதினெட்டு படிகளின் தத்துவத்தை அறி ந்ததும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார் மன்னன். பின்பு ஆலயத்தில் எவ்விதம் கருவறையில் மணிகண்டனின் விக்கிரகத்தை அமைப்பது என்று கேட்டார்.
அதற்கு அசரீரியோ காலம் கடந்த பின் முனிவ ர் ஒருவரால் மணிகண்டனின் விக்கிரகம் ஆலயத்தை வந்தடையும் என்று கூறியது.
ஆலயப் பணி நிறைவுறுதல் :
அசரீரி கூறியப்படியே மன்னனும் ஆலயத்தை கட்டத் தொடங்கினார். ஆலயத்திற்கு தேவை யான அனைத்து பணிகளும் விரைவாக செய்யப்பட்டு ஆலயப்பணி நிறைவடையும் காலமும் வந்தது. காலம் முடிய முடிய மன்னனு க்கோ ஆலயத்தில் மணிகண்டனின் விக்கிர கம் எவ்வடிவில் வருமோ என்று ஒரு தயக்கம் அவரின் மனதில் இருந்து கொண்டே இருந்த து. ஆலயமும் முழுமையாக கட்டப்பட்டு பிரதி ஷ்டைக்காக காத்து கொண்டிருந்தது.
விக்கிரக பிரதிஷ்டை :
யாருமே எதிர்பாராத விதமாக மணிகண்டனி ன் விக்கிரகத்தை வடிவமைத்து அந்த ஆலயத் திற்கு கொண்டு வந்தார் பரசு ராமர். இம்மலை யை உருவாக்கிய பரசுராமர் கரங்களிலேயே இம்மலையிலிருந்து அருள்பா விக்கும் மணி கண்டனின் விக்கிரகம் வருவ தை அறிந்த மன்னனுக்கோ எல்லையற்ற ஆனந்தம். நம் கண் எதிரே பல யுகங்கள் கடந்து, பல வருடங் க்ள் கடந்து மக்களுக்கு அருள் பாவிக்கும் ஒரு புண்ணிய ஷேத்திரம் உருவாகிக் கொண்டிரு ப்பதை எண்ணி மனதி ல் ஆனந்தமும் மகிழ்ச் சியும் அடைந்தார் தனது பிறவிப்பலனை முழுமையாக இன்று நிறை வேற்றி விட்டோம் என்று மனநிறைவு கொண்டார்.
இரண்டு கால்களையும் குத்திட்டு, யோக நிலையில் உட்கார்ந்திருந்த படி தத்வமஸி என்னும் முத்திரையைக் காட்டியப்படி மணிக ண்ட சுவாமியின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அருளினார் பரசுராமர்.
வருடா… வருடம்… தனது தந்தையிடம் அளித்த வாக்குறுதியின்படி மகர சங்கராந்தி தினத்த ன்று ஜோதி வடிவில் இன்றளவும் தனது பக்த ர்களை காண வந்து கொண்டிருக்கின்றார் ஐயப்பன்.
அனைவருக்கும் ஐயனே, சாஸ்தாவே என்று மணிகண்டனை பலவிதமாக துதித்து அர்ச்ச னை செய்து மணிகண்டன் என்னும் திருநாம த்துடன் ஐயப்பன், சாஸ்தா என பல்வேறு நாமங்களால் பின்னாளில் அழைக்கப்பெற்று கலியுகத்தில் இன்றும் மனதார விரதமிருந்து தன்னை காண வரும் பக்தர்களுக்காக காட்சி யளித்து அருள்பாலித்து வருகிறார்…
சபரி பீடத்தில் தர்ம சாஸ்தாவாகவும், மணிக ண்டனாகவும், ஐயப்பனாகவும் அமர்ந்து இன்ற ளவும் நம் மனம் என்னும் பீடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். ஐயன் ஐயப்பனாக, மணி கண்ட சுவாமியாக, தர்ம சாஸ்தாவாக, சபரி கிரிவாசனாகவும் அருள் பாவிக்கிறார்.
நாமும் ஐயனை வழிபடுவோம்… ஐயனின் அருளைப்பெற்று வாழ்க்கையில் மகிழ்வுடன் வாழ்வோம். என்றும் மனநிறைவுடன் வாழ மணிகண்டனின் பேரருள் நமக்கு எப்போதும் துணை நிற்கட்டும்.
சுபம்..
இனிதே நிறைவு பெற்றது..
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…