Thursday, October 19, 2023
HomePurana Kathaigalசுவாமி ஐயப்பன் வரலாறு 5

சுவாமி ஐயப்பன் வரலாறு 5

நேற்றைய தொடர்ச்சி..
மகிஷியின் ஆட்டத்தை அடக்க
பிறந்துவிட்டார்… சுவாமி ஐயப்பன்.

நடனக் கலையின் ஒரு இடத்தில் தனது இரு கரங்களை தூக்கி மார்பிற்கு இணையாக வை த்து, தனது நடன அசைவுகளால் தனது கரங்க ளை சிரத்தின் மீது வைத்து நடனமாடினாள் மோகினி.
மோகினியை பின்தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த பஸ்மாசுரன் அவர்களைப் பின் தொடர்ந்து நடனமாடும் நிலையில் தான் பெற்ற வரம் பற்றிய எண்ணம் அவன் நினை விற்கு எட்டாமல் நடன நிலையில் தன்னை முழுவதும் மறந்து அபிநயக் கலையால் தனது கரங்களை கொண்டு தனது சிரத்தின் மீது வைத்த அடுத்த கணமே அவன் பெற்ற வரத்தா ல் முழுவதும் எரிந்து சாம்பலாகி தன் அழிவை தேடிக் கொண்டான்.
மணிகண்டன் பிறப்பு :

முன்னொரு சமயம் பிரம்ம தேவர் தேவர்களு டன் வந்து மகிஷி அரக்கியை பற்றியும், அவள் பெற்ற வரத்தை பற்றியும் எடுத்துரைத்து, அரக்கியால் தேவர்கள் அடையும் இன்னல்க ளை சிவபெருமானிடம் எடுத்துரைத்து இருந்தார்.
பஸ்மாசுரன் முழுவதுமாக அழிந்த பின்பு திரு மால் சிவபெருமானை எண்ண, சிவபெருமா னும் அவ்விடம் தோன்றினார். சிவபெருமான் மோகினியாக அவதாரம் கொண்ட திருமாலை கண்டதும் பிரம்ம தேவர் எடுத்துரைத்திருந்த மகிஷி அரக்கியை அழிக்கும் தருணத்திற்காக காத்திருந்தது போல் சிவபெருமான் மோகினி அவதாரத்தை காண இரு சக்திகளின் இணை வால் ஒரு மாபெரும் சக்தியானது பல லட்ச சூரிய ஒளியின் வெளிச்சத்தை காட்டிலும் அதிக வெளிச்சம் கொண்ட ஒரு குழந்தையை உருவாக்கியது.
தேவர்களின் மகிழ்ச்சி :
இரு சக்திகளின் இணைவால் உருவான குழந்தையை காணவும், அரக்கியின் இன்னல் களிலிருந்து தங்களைக் காக்கும் வல்லமை கொண்ட ஐயனைக் காணவும், தேவாதி தேவர் கூட்டம் அனைவரும் அவர் உருவான இடத்தை வந்தடைந்து அக்குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.
இவ்விடத்தை ஆண்டுக்கொண்டிருக்கும் பந்த ளராஜன் என்னும் அரசன் மிகுந்த சிவபக்தி கொண்டவன் என்றும், அவனுக்கு பிள்ளை இல்லையே என்றும், ஏங்கிக்கொண்டு உள்ளா ன். அவன் ஏக்கங்களை நீக்கும் பொருட்டு இக்குழந்தை அவரிடமே வளர்ந்து, தனது அவதார கடமைகளை நிறைவேற்றி கொள்ள ட்டும் என்று கூறினார் சிவபெருமான்.
சிவபெருமானும், மோகினியும் பிறந்த குழந் தையின் கண்டத்திலேயே ஒரு மணியை கட்டி வைத்துவிட்டு மறைந்தனர். அப்போது, வானத் தில் இருந்த வண்ணமே ஒருமரத்தின் நிழலில் பசும்புல் கொண்ட படுக்கையில் இருந்த குழந்தையை தேவர்கள் அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர்.
மன்னனின் தீராத கவலையை
தீர்த்து வைத்த சிவபெருமான்:
மனதில் இருந்த பலவித குழப்பங்களால் வன த்தில் வேட்டையாடவும் விருப்பமில்லாமல், ஆனால் வேட்டையாட வேண்டும் என்ற எண்ண த்துடனும் வனத்தை நோக்கி சில வீரர்களுடன் பந்தள நாட்டு அரசனான ராஜ சேகர பாண்டியன் மிகுந்த சோர்வுடன் வந்து கொண்டிருந்தார்.
ஒரு நிலையில் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, தனது எண்ணங்களிலிருந்து விடு பட்டு அழுகுரல் வரும் திசையை நோக்கி தனது குதிரையில் அமர்ந்து, தனது வீரர்களு டன் இணைந்து அவ்விடம் வந்து பார்த்தார்.
அவ்விடத்தில் இருந்த குழந்தையை கண்டு ஆச்சரியமும், வேதனையும் கொண்டார். மிருகங்கள் நடமாட்டம் நிறைந்த வனத்தின் நடுவிலே யாருடைய துணையும் இல்லாமல், ஒரு குழந்தையானது தன்னந்தனியாக இருப் பதை கண்ட மன்னன் யாரும் இல்லாமல் ஒரு குழந்தையானது அவ்விடம் தனியாக அழுதுக் கொண்டு இருப்பதை கண்டு அதனருகே சென்று, அக்குழந்தையை எடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை குறிப்பி ட்ட தூரத்தில் மனித நடமாட்டம் உள்ளதா? என அறிந்துவர உத்தரவிட்டார்.
வீரர்கள் அனைவரும் மன்னரின் ஆணைக்கி ணங்கி குறிப்பிட்ட தூரம் வரை செல்ல கண்ணு க்கு எட்டிய தூரம் வரை எந்த ஒரு மனித நடமாட்டமும் இல்லை என்பதை அவர்க ள் அறிந்து வந்து… தங்களது மன்னனிடம் எடுத்துரைத்தனர்.
வீரர்கள் சென்ற சில நொடிகளிலேயே தன் மார்பின் அருகில் வந்த குழந்தையானது அழுகையை நிறுத்தி புன்னகைக்க தொடங்கி யது. அக்குழந்தையின் புன்னகையில் இந்த நாள் வரை தனது மனதில் இருந்த அனைத்து விதமான கவலைகள் மற்றும் துன்பங்கள் என அனைத்தும் மறைந்து இதுநாள் வரை மன்ன னாக இருந்து தனக்கு கிடைக்காத மன மகிழ் ச்சியை, அக்குழந்தையை தனது கரங்களில் ஏந்திய நொடிப்பொழுதில் இருந்து அவர் அனுபவித்தார்.
நன்றி தெரிவித்தல் :

குழந்தையானது பந்தளராஜனின் கரங்களில் இருப்பதைக் கண்ட தேவர்களும் மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டனர்.
வீரர்கள் சொன்ன செய்திகளை கேட்ட பந்தள/ராஜன் மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டார். குழந்தையானது இறைவனால் தனக்கு தன் மனதில் உள்ள கவலைகளைப் போக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட வரமாகவே கருதினார் பந்தளராஜன். அவ்விடத்தில் சிவ பெருமானுக்கு மனதார மிகவும் பரிசுத்தத்து டன் நன்றி தெரிவித்தார்.
நாளை தொடரும்…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =

Most Popular