சுவாமி ஐயப்பன் வரலாறு 10

168

நேற்றைய தொடர்ச்சி..
மகாராஜாவின் பதிலால் மனம் உடைந்த
மகாராணி.. மகாராஜாவிடம் உரையாடல் :
மகாராஜா மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த தரு ணம் பார்த்து, மகாராணியோ மகாராஜாவிடம் சென்று தனது மனதில் இருந்து வந்த எண்ண ங்களை வெளிப்படுத்தினார். அதாவது தன்னு டைய வயிற்றில் பிறந்த ராஜசேகரனே. தங்களுக்கு பின் அரசாள வேண்டும் என்றும், வனத்தில் இருந்து எடுத்து வந்த மணிகண்ட ன் தங்களுக்கு பின் அரசாள்வது என்பது எனக்கு விருப்பமில்லை என்றும் மகாராணி, மகாராஜாவிடம் உரையாடிக்கொண்டிருந்தார்.
ஆனால், மகாராஜாவோ மகாராணியின் கூற்றுகளுக்கு செவிசாய்க்காமல் தனக்கு பின், மணிகண்டன் மட்டுமே தனது ராஜ்ஜிய த்தை ஆள வேண்டும் என்பதில் திடமாக மகா ராணியிடம் எடுத்துரைத்தார். சில நாட்களாக வே உனது போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன் ராணி. ஆனால், அது இவ்வகையில் இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவனும் நம் மகனே. மூத்தோன் இருக்கும் பட்சத்தில் இளையோன் ஆளக்கூடாது என்பதை நினை வில் கொள். மணிகண்டனே எனக்குப்பின் அரசாள்வான் என்று எடுத்துரைத்து அவ்விடம் விட்டு சென்றார்.
கோபத்துடன் அமைச்சரிடம் சென்றமகாராணி
மகாராணிக்கு, மகாராஜாவின் கூற்றுக்களில் திருப்தி இல்லாமையால் அவர் மிகுந்த கோப த்துடன் முதலமைச்சரை அணுகி இந்த உரிமையில் தான் ஈன்ற மகனே, வெற்றிக் கொள்ளும் வகையில் நிவர்த்தி செய்ய இயலு மா? என்று கேட்டார். மேலும், மூத்தோன் இருக் கும் பட்சத்தில் இளையோன் ஆள இயலாது என்று மன்னன் கூறியது அவர் மனதில் மிகவு ம் ஆழமாக பதிந்திருந்தது.
ராணியின் மனதில் பதிந்த இந்த எண்ணம் முதலமைச்சரின் சதித்திட்டத்திற்கு ஒரு விதை யாகவே அமைந்தது. அதாவது, தனது மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பகையை நிறைவேற்றிக்கொள்ள இந்த விதையை தனக்குரிய ஒரு மரமாக மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டு அதை செயல்படுத்தவும் தொடங்கினார். அதாவது, மகாராணியின் அதிகாரத்தையும் அவர்களிடம் இருந்த பொரு ட்களையும்கொண்டு தனது சதித்திட்டத்தை செயல்படுத்த பலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார்.
நாடகம் ஆடிய மகாராணி.
திட்டத்தை செயல்படுத்துதல்:
மகாராஜாவும் மணிகண்டனை இளவரசனாக அறிவிக்கும் பொருட்டு ஏற்பாடுகளை மேற் கொண்டு வந்த அவரின் வேகத்தை காட்டிலும், தன் திட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்து முனைந்தார் முதலமைச்சர். அதற்கென ஒரு மாபெரும் திட்டத்தை தீட்டினார்.
அதாவது அரண்மனை வைத்தியரை கொண் டு சில பதவிகள் அளிப்பதாக உறுதிமொழி கொடுத்து, செய்யும் காரியத்திற்கான பொரு ளையும் கூறி, மகாராணிக்கு உடல்நலம் சரி யில்லாமல் இருப்பதாகவும், அதைச் சரிசெய்ய சில கடுமையான இடத்திலிருந்து பொருட்கள் கொண்டுவரும் விதத்திலும் இருத்தல் வேண் டும் என்று கூறுமாறு முதலமைச்சரும் மற்றும் மகாராணியும் இணைந்து சதித்திட்டம் தீட்டினார்கள்.
திட்டத்தின் படியே ராணியும் தனது நாடகத்தை மகாராஜாவிடம் அரங்கேற்ற தொடங்கினார். அதாவது தனக்கு தலைவலி என்பது மிகவும் கடுமையாக இருப்பதாகவும் தன் வேலைகளி ல் சிறிதும் கவனம் செலுத்த இயலவில்லை என்றும் அரண்மனையே அதிரும் வகையில் அலறிக்கொண்டு மிகுந்த வேதனையுடன் இருப்பதாக காட்டிக்கொண்டாள்.
வைத்தியரின் ஆலோசனை :
மகாராணியின் அலறலைக் கேட்ட மகாராஜா வும், நிகழ்வது யாது? என்று அறியாமல் உடன டியாக அரண்மனை வைத்தியரை அழைத்து மகாராணிக்கு உகந்த சிகிச்சை அளிக்குமாறு கூறினார். ஏற்கனவே திட்டமிட்ட சதித்திட்டத்தி ன் படியே தனது செயல்பாடுகளை அரங்கேற்ற தொடங்கினார் வைத்தியர். அதாவது, மகாரா ஜாவின் முன்னிலையில் மகாராணியை உடல்நிலை ஆராய்வது போல சில மூலிகைக ளை கொடுத்து அவரின் தலைவலி குறைவத ற்காக முயற்சி செய்வதாகவும் தனது பாவன ங்களை மேற்கொண்டார்.
பல மூலிகை அளித்தும்மகாராணியின் தலை வலியானது சரியாகவில்லை என்று சற்று சஞ்சலம் கொண்ட முகத்துடன் மகாராஜாவிட ம் அவர்கள் திட்டமிட்ட சதித்திட்டத்தில் இரண் டாம் நிலையை செயல்படுத்தத் தொடங்கினா ர்கள். மகாராஜாவோ முதலமைச்சரிடம் ராணி யின் நிலையை எடுத்துக்கூறி மற்ற தேசத்தில் இருக்கும் வைத்தியரையும் அழைத்துவர ஆணையிடலாம் என்று கூறினார்.
ஆனால், முதலமைச்சரோ மகாராஜாவே நம் வைத்தியர் சாதாரணமானவர் அல்ல… அவர் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்த க்கூடியவர் என்று ஆறுதல் கூறினார். மேலும், மகாராணிக்கு ஏற்பட்டுள்ள தலைவலிக்கு உண்டான தீர்வையும் இந்நிலையில் தேர்வு செய்து வைத்திருப்பார். மனம் சஞ்சலம் கொள்ள வேண்டாம் என்று ஆறுதல் கூறுவது போல் மகாராஜாவிடம் உரையாடி அவர்களின் திட்டத்திற்கு தகுந்தாற்போல் மகாராஜாவை யும் அவர் அறியா வண்ணம் அழைத்துச் சென்றார்.
நாளை தொடரும்…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…