சுவாமி ஐயப்பன் வரலாறு 14

1146

நேற்றைய தொடர்ச்சி…
மணிகண்டனை மணக்க விரும்பிய லீலாவதி:
நான் கொண்ட எனது எண்ணங்களே என்னு டைய இந்நிலைக்கு காரணமாகும் என்று தனது முற்பிறவி கர்மாவை எடுத்துரைத்தாள்.
லீலாவதியின் வேண்டுகோள்:
எனக்கு இருந்த சாபத்தை நீக்கி எனக்கு புத்து யிர் அளித்த ஐயனை கண்டு, இரு கரம் இணைத்து கூப்பியப்படி இனி நான் தங்களு க்கு உரியவள் என்றும், தங்களுக்கு மட்டுமே சொந்தமானவள் என்றும் என்னை தாங்கள் திருமணம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டி நின்றாள் லீலாவதி.
மணிகண்டனின் முடிவு :
லீலாவதியின் கூற்றுகளைக் கேட்ட மணிகண் டன் லீலாவதியிடம் யாது உரைப்பது என்று அறியாமல் அமைதி காத்து கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு தனது பிறப்பின் நோக்கம் யாது என்றும், இந்த ஜென்மத்தில் தான் என்ன செய்ய இயலும் என்பதை பற்றி யும் லீலாவதியிடம் கூறத் தொடங்கினார்.
அதாவது இந்த பிறப்பின் நோக்கம் என்பது நித்ய பிரம்மச்சாரியாக இருப்பது என்பதே ஆகும். எனவே, என்னை அடைய வேண்டும் என்கின்ற உன்னுடைய விருப்பத்தை மாற்றி க்கொள்வது என்பது உனக்கு நன்மை அளிக்க கூடியதாகவும், உன்னுடைய இந்த எண்ணமா னது என்றும் நிறைவேறாத எண்ணமாக அமைந்துவிடும் என்றும் தனது அவதார நோக்கத்தை கூறினார்.
லீலாவதி முறையிடுதல்:
ஆனால், லீலாவதி மணிகண்டன் கூறிய கூற்றுக்களில் விருப்பமில்லாமல் என்னை இவ்வுலகிற்கு அழைத்து சாப விமோச்சனம் அளித்த தாங்கள் இவ்விதம் என்னை புறக்க ணிப்பது என்பது உசிதமானது அல்ல. நீங்கள் செய்வது நல்லதல்ல என்றும், என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் மிகவும் பணிவுடன் மனமுடைந்த நிலையில் வேண்டி நின்றார்.
மணிகண்டன் லீலாவதியின் நிலை மற்றும் அவளின் மனமுடைந்த கூற்றுக்களிலிருந்து அவளுடைய விருப்பங்களை மாற்ற இயலாது என்பதையும் அறிந்து கொண்டார். பின்பு மணிகண்டன் ஆகிய நான் உன்னை மணக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வாய்ப்பு மட்டும் தான் உள்ளது என்று கூறினார்.
மணிகண்டன் கூறிய அந்த ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தான் உள்ளது என்ற செய்தியானது, லீலாவதிக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆனந் தத்தை அளித்தது. அந்த வாய்ப்பு என்னவாக இருந்தாலும் சரி அதை நான் நிறைவேற்றியே தீருவேன் என்று கூறி மணிகண்டனின் கூற்று க்காக காத்துக்கொண்டிருந்தார்.
மாளிகைப்புரத்து அம்மனின் சுவாரஸ்ய கதை:
ஆலயம் எழுப்புதல்:
மணிகண்டன் ஆகிய நான் இந்த மலைப்பிர தேசத்தில் தவக்கோலத்தில் அமர்ந்து என்னை காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அருள் பாவிக்க ஒரு ஆலயம் இங்கு உருவாக உள்ளது.
அவ்விதம் உருவாகும் ஆலயத்தில் உள்ள என் னை வழிபட வருடாவருடம் ஆயிரக்கணக்கா ன பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். அப்படி வருகின்ற ஒருவர் அடுத்த வருடம் வருகி ன்ற பொழுது புதிய பக்தர்களை அழை த்து வருவார்கள்.
அவ்விதமான புதிய பக்தர்கள் ‘கன்னி ஸ்வாமி கள்” என்று அழைக்கப்படுவார்கள். ஏதேனும் ஒரு வருடத்தில் கன்னிச் சாமிகளின் வருகை இல்லாத காலம் அமைந்தால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன் என்று கூறினார்.
லீலாவதியின் விருப்பம்:
மணிகண்டனுடைய கூற்றுக்களிலிருந்து லீலா வதியின் விருப்பம் நிறைவேறுமா? அல்லது நிறைவேறாமல் இருக்குமா? என்பது பற்றிய எண்ணம் மேலோங்கியது. இருப்பினு ம் தன் மனதிற்கு விரும்பியவர். தன் அருகில் இருப்பது. என்பது மிகவும் மகிழ்ச்சியான செய லாகும் என்பதை உணர்ந்து அந்தக் காலம் வரும் வரை நாமும் காத்திருப்போம் என்று முழு மனதாக அயனான மணிகண்டனை நம்பினாள்.
லீலாவதியிடம் காணப்பட்ட மாற்றத்தை அறி ந்த மணிகண்டனும், லீலாவதிக்கு அருளும் பட்சத்தில் இந்த மலையில் எனக்கு எழுப்பும் ஆலயத்திற்கு அருகிலேயே உனக்கும் ஓர் ஆலயம் எழுப்ப செய்கின்றேன் என்றும், நீ என்றும் எனது இடது பக்கத்தில் கோவில் கொண்டிருந்து… மாளிகைப்புரத்து அம்மனாக இருந்து அருள் புரிவாய் என்றும், என்னை பார்க்க வருகின்ற ஒவ்வொரு பக்தர்களும் உன்னையும் பார்க்க வருவார்கள் என்றும், அவர்களுக்கு நீ அருள் புரிய வேண்டும் என்றும், நாளடைவில் உன்னை எல்லோரும் ‘மஞ்சமாதா” என்று அழைப்பார்கள் என்றும் சொல்லி ஆசி வழங்கினார்.
நாளை தொடரும்…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…