சுவாமி ஐயப்பன் வரலாறு 7

275

நேற்றைய தொடர்ச்சி….
வித்தைகளில் சிறந்து விளங்கிய மணிகண்டன்:
முதலமைச்சரின் இத்தகைய எண்ணமானது அரண்மனையிலுள்ள வீரர்கள் மற்றும் ராஜா, ராணி ஆகியோரின் மீது கோபத்தை தூண்டி யது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் மனதில் வைத்துக்கொண்டே இருந்ததால் நாளடைவில் இந்த கோபமானது ஒரு பெரிய தவறை இழைக்கும் நிலைக்கு அவரை அழை த்துச் சென்றது. அதாவது சிறு பாலகனான மணிகண்டனை கொல்லும் அளவிற்கு அவரின் எண்ணங்கள் அவரை வழிநடத்திச் சென்றன.
கல்வி கற்கும் பருவம் :
சிறு பாலகனாக இருந்த மணிகண்டன் கல்வி கற்கும் பருவத்தை வந்தடைந்தார். பின்பு பந்தள தேசத்திலுள்ள வனத்தில் ஆசிரமம் அமைத்து குருகுலம் நடத்திக் கொண்டிருந்த முனிவர் பெருமக்களுள் ஒருவரிடம் ஒரு சுப முகூர்த்த நாளில் தனது மகனான மணிகண்ட னை ராஜா மற்றும் ராணி ஆகிய இருவரும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றனர்.
மகாராஜா தனது புதல்வனை உங்களது சீட னாக ஏற்று, சகல வித்தைகளையும் கற்றுத் தருமாறு முனிவரிடம் கூறினார். முனிவரும் குரு தட்சணையை ஏற்றுக்கொண்டு அவ்வித மே அருளி மணிகண்டனை தன் சீடனாக ஏற்று க்கொண்டு வித்தைகளை கற்றுக்கொடுக்க தொடங்கினார்.
திறமையை அறிந்து கொண்ட முனிவர் :
மணிகண்டனை கண்ட முனிவர் மணிகண்ட னுக்கு அனைத்து வித்தைகளும் தெரியும் என்றும் இவருக்கு நாம் புதியதாக எதையும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை என்பதை யும் நன்றாக உணர்ந்து கொண்டார்.
அவர் எண்ணிய விதத்தின் அடிப்படையிலே யே மணிகண்டன் கல்வி பயிலும் விதமும், வித்தைகளை கற்கும் ஆர்வமும் மற்றவர்க ளைக் காட்டிலும் முதன்மை இடத்திலேயே இருந்தது. எந்த சூழ்நிலையிலும் நிதானமாக சிந்தித்து அதேசமயம் வேகமாக செயல்படும் திறமை கொண்டவராக விளங்கி வந்தார்.
மன்னர்களுக்கு உண்டான அனைத்து பயிற்சி களையும் அதாவது வால் வித்தை, அம்பு எய்தல் மற்றும் தேகம் சம்பந்தமான அனைத்து பயிற்சிகளிலும் மற்றவர்களை காட்டிலும் மணிகண்டன் முதன்மை இடத்திலேயே இருந்து வந்தார்.
தன் குருவிற்கே குருவான மணிகண்டன்:
மணிகண்டனுக்கு குருவாக இருப்பது எந்த ஜென்மத்தில் தான் செய்த புண்ணியமோ என்று எண்ணும் அளவிற்கு முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தன் பிறவி பலனை அடைந்ததாக எண்ணி ஆனந்தம் கொண்டார்.
கல்வி பயின்ற காலம் முடிவுற்று அரண்மனை அடையும் நேரமும் மணிகண்டனை நெருங்கி யது. மணிகண்டன் தனது குருவானவரை கண்டு குருதட்சணை அளித்து அவரிடம் ஆசிப்பெற்று தன் இல்லத்திற்கு செல்ல, தன் குருவைக் காண அவர் இல்லம் நோக்கி சென்றார்.
குருவுக்கு குருவாதல் :
மணிகண்டனின் நோக்கத்தை அறிந்த குருவு ம் அவர் அளித்த தட்சணையையும் மனதார பெற்றுக்கொண்டு… ஆனால், முகத்தில் மகிழ்ச்சி இல்லாமல் வாங்கிக்கொண்டார். குருவின் முகத்தில் காணப்பட்ட நிலையைக் கண்ட மணிகண்டனும் தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம் என்று குருவிடம் பணிந்து நின்றார்.
சில நொடிகள் யோசித்த குருவும் மனதில் தைரியத்துடன் மணிகண்டனிடம் தன் மனதில் இருந்து வந்த பல நாள் கவலைகளை அவரிட ம் கூறினார். அதாவது தனக்கென்று இருக்கக் கூடிய மகனும் பேச இயலாமல் இருப்பதை மணிகண்டனிடம் கூறி… என் மகனுக்கு பேச்சு அளிக்க முடியுமா? என்று கேட்டார்.
குருநாதரின் விருப்பத்திற்கேற்ப அவ்விதமே ஆகட்டும் கவலைக்கொள்ள வேண்டாம் என்று ரைத்து குருநாதரின் மகனை அழைத்து தான் கொடுத்த தட்டில் இருந்த கனியை எடுத்து குருவின் மகனிடம் கொடுத்தார். பின்பு அவ்விடமே அக்கனியை உண்ண சொன்னார். மணிகண்டனின் கூற்றுக்கிணங்கி அப்பால கனும் அக்கனியை உண்டார்.
பாலகன் கனியை உண்டு முடித்ததும், மணிக ண்டன் பாலகனை கண்டு என் மீது நம்பிக்கை கொண்டு என்னை கவனத்துடன் பார். இப்பொழுது நான் உன்னிடம் என்ன உரைக்கி ன்றேனோ அதை மீண்டும் என்னிடம் உரைக்க வேண்டும் என்று, அவனை தன் அருகில் அழைத்து கொண்டு, அவனிடம் பஞ்சாட்சர மந்திரமான ”நமசிவாய” என்றும் அஷ்டாக்ஷர மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை கூறி இப்பொழுது என்னிடம் உரை என்று கூறினார்.
பாலகன் சொல்ல முயலுகையில் அவன் கண்டப்பகுதியில் தன் கரங்களால் மென்மை யாக அழுத்தியதில் நிகழ்ந்தது ஒரு அற்புதம். அதாவது, மணிகண்டன் கூறிய பஞ்சாட்சர மற்றும் அஷ்டாட்சர மந்திரத்தை கூற, அவனும் அம்மந்திரங்களை மெதுவாக அனைவரும் கேட்கும் வண்ணம் உரைக்க தொடங்கினான்.
நாளை தொடரும்…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..