சுவாமி ஐயப்பன் வரலாறு 6

288

நேற்றைய தொடர்ச்சி….
பந்தள ராஜனுக்கு கிடைத்த பொக்கிஷம்:
*
அக்குழந்தையை தனது ராஜ்ஜியத்தின் இளவ ரசன் ஆகவே கருதினார் பந்தள மன்னன். குழந்தையின் சிரிப்பில் இதுவரை தான் காணாத மகிழ்ச்சியையும், எவ்விதம் உரைப்பது என அறியாவண்ணம் தனக்கு இதுவரை கிடைக்காத மனமாற்றத்தையும், மன மகிழ்ச்சியையும் அடைந்தார்.
பின்பு குழந்தையுடன் தனது ராஜ்ஜியத்தை அடைந்து, தனது மனைவியான மகாராணியி டம் அக்குழந்தையை காண்பித்து மகிழ்ந்தார். மகாராணியும் அக்குழந்தையை கண்டது முதல் தனது மனதில் இருந்த துன்பங்கள் முழுவதுமாக மறந்து குழந்தையின் சிரிப்பில் புது உலகை கண்டார். குழந்தையை தனது கண்களில் ஒற்றிக்கொண்டு தனது மார்போடு அணைத்து அக்குழந்தையின் விரலோடு தலையை வருடி விளையாடினாள்.
தன் பதியிடம் இந்த குழந்தை யாருடையது என்று வினாவினார். ஆனால், அக்குழந்தை யை கண்டது முதல் தான் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையற்றது என்பதையும் அவளிட ம் சொல்வதறியாது இருந்தாள்.
பந்தள ராஜனான ராஜசேகர பாண்டியன் வனத்தில் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார். இக்குழந்தை எவருடையதும் அல்ல, இனி நம் குழந்தையாகவும், இனி யாவரும் இக்குழந் தையை சொந்தம் கொள்ள இயலாது என்றும்.. அவ்விதம் வரும் வகையில் நாம் தர இயலாது என்றும்… தன் மனைவியிடம் கூறினார். மகா ராணி கண்களில் கண்ணீர் வடிக்க, தன் பதி யானவரை அணைத்து, தனது கரங்களால் குழந்தையை வருடி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
செய்தி பரவுதல் :

பந்தள ராஜனுக்கும், ராணிக்கும் குழந்தை கிடைத்த சந்தோஷ செய்தி நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மிகுந்த மகிழ்ச்சி யில் ஆரவாரம் கொண்டு தங்கள் நாட்டு மன்னனுக்கு இன்று முதல் திருப்தியான சூழல் அமையும் என்று எண்ணி அனைவரும் குழந்தையை காண வந்து கொண்டிருந்தனர்.
பெயர் சூட்டல் :

மகிழ்ச்சி சூழ்ந்த அவ்வேளையில் நம் குழந்தை க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்க மன்னர் கணநேரம் யோசிக்கத் தொடங்கினார். பின்பு, தன் மனைவியிடம் இக்குழந்தையின் கண்டத்தில் சின்னதாக மணி கட்டப்பட்டு இருக்கின்றது பார்த்தாயா என்றார் மன்னன்.
பின்பு அம்மணியை தனது கரங்களில் மெல்ல தடவிய வண்ணம்… தன் குழந்தைக்கு பெயர் வைப்பதற்கான பெயர் கிடைத்துவிட்டது என்று கூறி கண்டத்தில் மணியுடன் காணப் படுவதால் இவனை மணிகண்டன் என்று பெயரிட்டு அழைப்போம் என்று கூறினார்.
மகனுடனேயே இருக்க ஆசைப்பட்ட மன்னன் :

அரண்மனையில் வளர்ந்து வந்த மணிகண்ட னின் செயல்பாடுகள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொடுத் தது. மணிகண்டனின் ஒவ்வொரு நடவடிக்கை களிலும் மகாராணி மிகவும் மகிழ்ந்து, நாள் முழுவதும் மணிகண்டன் உடனே காலத்தை கழித்து வந்தார். மணிகண்டனை காண வந்தவர்களும் மணிகண்டனின் அழகில் மயங்கி அவரை புகழ்ந்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர். இதைக் கண்ட மன்னர் தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய இறை வனுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அரச சபைகளிலும் மணிகண்டனை பற்றிய பேச்சுக்களும், மணிகண்டன் பற்றிய நினைவு களுடனேயே மன்னரும் திகழ்ந்து கொண்டிரு ந்தார். நகர்வலம் செல்லும் பொழுதும் மணிக ண்டனுடன் சென்று கொண்டிருந்தார். மணிக ண்டன் வருகின்றார் என்பதை அறிந்த ஊர் மக்கள் எப்பொழுதும் விட அதிக கூட்டத்துடன் வந்து பார்த்து இளவரசரை கண்டு மனதார மிகவும் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
எதிரி உருவாதல் :.

மணிகண்டனின் வருகை அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் ஒருவருக்கு மட்டும் அவனை பிடிக்கவில்லை. அவர் தான் அரண்ம னையில் மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள முதலமைச்சர் ஆவார். ஏனெனில் பிள்ளை இல்லாத பந்தள ராஜாவின் அதிகா ரம் முழுவதும், அவருக்குப் பின் தான் ஆள வேண்டும் என்ற எண்ணம் அவருள் இருந்த வண்ணமே இருந்தது. ஆகவே, இங்கு வந்திரு க்கும் மணிகண்டன் வருகையை கண்டு மகிழ்ச்சியுடன் இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தார்.
நாளை தொடரும்…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…