Wednesday, October 18, 2023
HomePurana Kathaigalமாணிக்கவாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவையார்!

மாணிக்கவாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவையார்!

மாணிக்கவாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவையார்!

சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த மாணிக்கவாசகர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் வந்து அங்கே சிவபெருமானை தரிசித்துவிட்டு அங்கேயே குடில் அமைத்து தங்கினார். அப்போது, மாணிக்கவாசகரின் தவக்குடிலுக்கு வந்த பெரியவர் ஒருவர், சிவபெருமான் ஆணைக்கினங்கவே தான் வந்ததாகக் கூறி, மாணிக்கவாசகரின் பக்தியை மெச்சினார். பிறகு, ‘பாவை பாடிய வாயால் சிவபெருமானை தலைவனாகக் கொண்டு கோவை பாடுக’ என வேண்டினார்.

மாணிக்கவாசகரும் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற நூலைப் பாடினார்.
அவர் பாடப் பாட அந்த 400 பாடல்களையும் ஏடுகளில் எழுதிக் கொண்ட பெரியவர், அவற்றை கையோடு எடுத்துச் சென்று விட்டார். மறுநாள் காலையில் நடராஜர் கோயிலுக்கு பூஜைக்கு வந்த அர்ச்சகர், நடராஜர் சந்நிதி படிக்கட்டில் ஓலைச் சுவடிகள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஊராருக்குத் தகவல் கொடுத்தார்.

அந்தச் சுவடிகளில் திருவாசகச் செய்யுள்களும், திருக்கோவையாரின் 400 செய்யுள்களும் இருந்தன. திருக்கோவையார் முடியும் இடத்தில், ‘இவை திருவாதவூரன் பாட, அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியவை’ என்று ஒப்பமும் இருந்தது. உடனடியாக, திருவாதவூராரான மாணிக்கவாசகர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். இறைவன் முன் நின்று அந்தச் சுவடிகளைப் பாடிய அவர், ‘நான் எழுதிய பாடல்களுக்குப் பொருள் இவரே’ என இறைவனைக் காட்டிவிட்டு சிவ அருள் ஒளியில் கலந்தார். சிதம்பரம் கோயில் குறித்து இப்படியொரு புராணச் செய்தி உண்டு.
சுவடி எழுதியது நடராஜரே!

நடராஜரே கையெழுத்திட்டதாக சொல்லப்படும் 25 அதிகாரங்களும் 400 பாடல்களும் கொண்ட அந்த திருக்கோவையாரும் அத்தோடு இருந்த திருவாசக ஓலைச் சுவடிகளும்தான் தற்போது புதுச்சேரி அம்பலத்தாடி மடத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது.

அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழை வைக்கப்பட்டுள்ளது. அதில்தான் திருவாசக ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கூறுகிறார் மடத்தின் 33-வது பீடாதி பதியான கனகசபை சுவாமிகள்.

”மேலும் கீழும் செப்புப் பட்டயங்கள் கோர்க்கப்பட்டு, வெண்பட்டுச் சுற்றி பாதுகாப்புடன் ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதை எக்காரணம் கொண்டும் பிரிக்கவோ, சோதிக்கவோ கூடாது என்பது எங்கள் முன்னோர் அறிவுரை. மாசி மகா சிவராத்திரியின் போது இரவு 11 மணியளவில் பேழை திறக்கப்பட்டு ஓலைச் சுவடிகள் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படும்.

அதுவும் ஒரு மணி நேரத்துக்குத்தான். அதன்பின், பழையபடி பேழைக்குள் வைக்கப்பட்டு விடும்” என்கிறார் கனகசபை சுவாமிகள். 350 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கர்நாடகப் போரின்போது சிதம்பரம் மடத்தில் இருந்த நடராஜர் விக்கிரகம், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை பாதுகாப்பு கருதி புதுச்சேரிக்கு எடுத்துவரப்பட்டதாக அம்பலத்தாடி மடத்தின் தலபுராணம் கூறுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + one =

Most Popular