Saturday, October 14, 2023
HomePurana Kathaigalதொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் புராணக் கதை!

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் புராணக் கதை!

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் புராணக் கதை!

புராணக் கதை:

மதுரை மாநகரில் வீற்றிருந்த மகாகாளி தொட்டியத்திலிருந்து பறை இசைக்கசென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியம் சங்கம் புதரில் வந்து அமர்ந்தாள், அப்போது எசங்கராயண்பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்து விட்டுபால் கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதருக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தது. இதனை அறியாதஊர் மக்கள் மாட்டில் பால் கறந்தால் பால்வருவதில்லை. எனவே சங்கம் புதரில் கள்வர்கள் யாரோ பாலை கறந்து விடுகிறார்கள் என்று இசங்கராய அரசனிடம் முறையிட்டனர்.

அரசன் தன் படை வீரர்களுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேடினார். அரசன் புதருக்குள் வாளை சொருகினான். சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது. உடனே மன்னன் அதிர்ந்து போனான். அவன் முன் ஸ்ரீ மதுரை காளியம்மன் தோன்றினாள் (இன்றும் கருவறையில் உள்ள மதுரை காளியம்மன் மேனியில் இக்காயத்தின் வடு உள்ளது). மனம் உருகி மன்னிக்கும்படி வேண்டி, தாயே உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறாய்? என்று மன்னன் கேட்டான்.

மதுரைகாளியம்மன் அரசனுடையபட்டியிலிருந்து ஒரு மாட்டை காட்டி இந்தமாடு எங்கெல்லாம் சென்று சுற்றிவருகிறதோ? அதெல்லாம் எனக்குசொந்தம், அதுவே எனது எல்லை என்றும துரைகாளியம்மன் கூறினாள். மாடுபதினெட்டு பட்டி கிராமம் சுற்றி வந்துபுதரில் நின்றது. 18 பட்டி மக்களும் என் பிள்ளைகள் என் அருள்பெற ஒரு அழகான கோவிலை அமைத்து என்னை வழிபடவகை செய்வாயாக என்று கூறி ஸ்ரீமதுரை காளியம்மன் மறைந்தாள். அம்மனின் வாக்கை கனிவுடன் ஏற்றஅரசன் உடனே “தொட்டியம் ஸ்ரீமதுரைகாளியம்மன் திருக்கோவிலை”கட்டினார்.

ஆலயத்தின் சிறப்பு:

கோவிலின் மூன்று நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளேசென்றால், விநாயகர், அழகு நாச்சியம்மன், மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராயன் சன்னிதிகள் உள்ளன. கருவறையில் அன்னை தொட்டியம் மதுர காளியம்மன் ஒய்யாரமாக வலது காலை குத்துக்காலிட்டு, இடதுகாலை தொங்க விட்ட நிலையில் வலது கரத்தில் திரிசூலம் ஏந்தி அழகிய எழிற்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். குதிரை மீது அமர்ந்த நிலையில் மன்னன் இசங்கராயன் சிலை, மதுரை செல்லான், தொட்டியம் சின்னான் சிலை சூழகருவறை அமைந்துள்ளது.

தேர் திருவிழா:

முக்கிய நிகழ்ச்சியான சுமார்முப்பதடி உயரம் உள்ள ஓலை பிடாரிஅம்மன், சுமார் இருபத்து ஒன்பது அடிஉயரமுள்ள சின்ன தேர்மதுரைகாளியம்மன், திருத்தேர் தலைஅலங்காரமும், அதன் பின் இரண்டுதேர்த்தூக்கும் நிகழ்ச்சி மூலம் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.
தமிழகத்திலேயே தோளால் தூக்கிச்செல்லப்படும் மிக உயரமான தேர் இதுவாகத் தான் இருக்கும். இரண்டுதேரும் ஒரே நேரத்தில் வீதிவலம்வருவதால், சுமார் 300பேர் ஒவ்வொருதேரையும் சுமந்து செல்கின்றனர். இவ்விருதேர்களையும் பக்தர்கள் தங்கள்தலையிலும், தோளிலும் சுமந்து திருவீதிஉலா வருவார்கள்.

இந்த இரு தேர்களையும் தூக்குவதற்காகவே கவுத்தரசநல்லூர்,சித்தூர், அரங்கூர், கிளிஞ்சநத்தம், அயினாப்பட்டி, ஏரிகுளம், பாலசமுத்திரம், தொட்டியம் கோட்டமேடு, சந்தப்பேட்டை, கொசவம்பட்டி, காமலாபுரம்புதர், தோளூர்பட்டி, ஏலூர்பட்டி, குண்டுமனிப்பட்டி, மாராச்சிப்பட்டி, உடையாளம்புத்தூர், நத்தம், புத்தூர், கார்த்திகைப்பட்டி என 18 பட்டி கிராமமக்கள் திருவிழாவில் ஒன்று கூடுகின்றனர். சிறிய தேரில் மதுர காளிஅம்மனும், பெரிய தேரில்ஓலைப்பிடாரிகளும் எழுந்தருளிவீதிகளில் வலம் வருவர்.

இத்தலத்தில் ஆண்டு தோறும் “ஆனித்திருமஞ்சனவிழா” வெகு விமரிசையாகநடைபெறும். திருமஞ்சன விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம்காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டிஎடுத்து அலகு குத்தி மதுரை காளியம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − eleven =

Most Popular