Tuesday, October 17, 2023
HomePurana Kathaigalவைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு!

வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு!

வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் தலமான வைத்தியநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாகக் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன், இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்து கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு.
தனக்கு உள்ள நோய்களைத் தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரிக்கு மருத்துவம் பார்க்க, சிவன் மருத்துவராகவும் அம்பிகை மருத்துவச்சியாகும் தோன்றியதாக ஐதீகம்.

இதயம் சரி வாருங்கள் இந்த பகுதியில் வைத்தீஸ்வரன் திருக்கோவிலில் சிறுத்தையைப் பற்றிக் காண்போம் வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு
வைத்தீஸ்வரன் கோவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும் அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த வைத்தீஸ்வரன் திருக்கோயிலுக்கு புள்ளிருக்குவேளூர் என்ற வேறு பெயரும் உண்டு. ஜடாயு பறவை ராஜனும், முருகப்பெருமானும், சூரியனும் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் குளத்தின் பெயர் சித்தாமிர்தம் என்று அழைக்கப்படுகிறது.

முன்னொரு காலத்தில் இந்தக் குளக்கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பாம்பு தவளையை முழுக்க முயன்றது அப்போது அவற்றை சதானந்த முனிவர் சபித்தார். அதன் காரணமாக இன்று வரை இந்த குளத்தில் பாம்பு தவளை போன்றவை காணப்படுவது இல்லையாம்.

இந்த கோயிலின் மூலவர் சன்னதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியாலான இரண்டு கொடிமரங்கள் உள்ளது. மற்ற கோயில்களில் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அமைந்திருக்கும். ஆனால் இந்த தலம் நவகிரகங்கள் அனைத்தும் மூலவரான சிவபெருமான் பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குகின்றன.

வைத்தீஸ்வரன் கோவில் அமைப்பு:

இந்த கோயிலின் கிழக்கில் பைரவ மூர்த்தியும், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரபத்திரர், வடக்கில் காளி ஆகியவர்கள் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
ஐந்து பிரகாரங்கள் கொண்ட இந்த கோவில், ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டது தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில் தல பெருமை:

முன்னொரு காலத்தில் அங்காரகன் வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு சிவபெருமானை வேண்டி நின்றார். அங்காரகனின் வேண்டுதலை ஏற்று அருள்பாலித்த ஈசன், வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதனை வழிபடுமாறு கூறினார். அங்காரகனும் அவ்வாறே செய்ய அவர் வெண்குஷ்டம் நோய் குணமானது.

இதனால் இத்தலத்தில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வைத்தீஸ்வரன் கோவில் திருவிழா கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஆட்டுக்கிடா வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார்.

மேலும், ஆடிப்பூரம், நவராத்திரி, கிருத்திகை, தை மாதத்தில் முத்துக்குமார சுவாமிக்குத் திருவிழா, பங்குனி பெருவிழா பங்குனி உத்திரத்தின் போது நாய் ஓட்டம், நரி ஓட்டம் இந்த நிகழ்விற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
குழந்தையான முருகப்பெருமானை மகிழ்விக்க இங்கு யானை ஓட்டம் என்ற விளையாட்டு காட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது. வைத்தீஸ்வரன் கோவில், அருள்மிகு செவ்வாய் ஸ்தலம் என்பதால் செவ்வாய் தோஷங்கள் உள்ளவர்கள் இந்த தளத்திற்கு வந்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வைத்தீஸ்வரன்கோவிலில் செவ்வாயின் அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் காட்சி அளிக்கிறார். முத்துக்குமாரன் சன்னதியில் படைக்கப்படும் சந்தனம் அனைத்து நோய்களையும் குணமாக்கும் என்பது ஐதீகம்.

வைத்தீஸ்வரன் கோவில் பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தளத்திற்கு வந்து, திருக்குளத்தில் நீராடி அதன்பின் உடுத்திய உடையும் அங்கேயே விட்டுவிட்டு புதிய உடையை உடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அங்கிருக்கும் விநாயகர், செவ்வாய், சிவன், அம்பாள் ஆகியோர் அனைத்தையும் வழிபட்டு வர அனைத்து தோஷங்களும் நீங்கும்.
மூலஸ்தான அங்காரகன் பிரகாரத்திற்குச் சென்று பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பின்னர் அவருக்குப் பிடித்த துவரை சாதம் செய்து நைவேத்தியம் செய்து, யாருக்குத் தோஷம் உள்ளதோ அவர்கள் கைகளால் பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை அளிக்கச் செவ்வாய் தோஷம் நீங்கும்.

வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியம்:

நாடி ஜோசியத்தின் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவில், அகத்தியர் அருளிய நாடி ஜோசியத்தை நம்பி இந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். மேலும் இந்த உலகில் உள்ள எல்லா மக்களையும் வசீகரிக்கக் கூடிய சக்தி இந்த கோயில்களுக்கு உள்ளதால், நாடி ஜோசியம் பார்த்து பலன் பெற்றவர்களும் உள்ளனர். இந்த கோவிலுக்கு சுமார் 5000 கோடி சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோவிலில் ஆறுகால பூஜைகள், ஜாம பூஜையின்போது செல்வத்துக்குமார சுவாமிக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

வைத்தீஸ்வரன் கோவில் நடை திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் மதியம் ஒன்று முப்பது மணி வரை நடை திறந்திருக்கும். அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படுகிறது.

வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் வழி:

திருச்சி வழியாக வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வழியாகச் சென்றடையலாம், சென்னை வழியாக வரும் பக்தர்கள் புதுச்சேரி மற்றும் சிதம்பரம் வழியாக இந்த கோயிலுக்கு வர முடியும்.

ஸ்ரீ தையல் நாயகி துதி:

தையல்நாயகி அம்மா தையல்நாயகி-என்றும்
தாயாக இருப்பவளே தையல்நாயகி
ஊர் உலகம் காப்பவளே தையல்நாயகி
உன் பாதம் சரணடைந்தேன் தையல்நாயகி

குங்குமத்தில் ஒளிவீசும் தையல்நாயகி-முத்துக்
குமரனுக்கே தாயுமானாய் தையல்நாயகி
வைத்தியத்தின் சிகரமாம் தையல்நாயகி
வைத்தியனாதனுக்கே துணையுமானாய் தையல்நாயகி

தங்கமுத்து மண்டபத்தில் தையல்நாயகி- என்றும்
சிங்காரக் கொலுவிருக்கும் தையல்நாயகி
பொங்கிவரும் காவேரிபோல் தையல்நாயகி
தங்குதடை நீக்கிடுவாள் தையல்நாயகி

காட்டுவழி ஆனாலும் தையல்நாயகி
கனிவுடனே துணைவருவாள் தையல்நாயகி
கள்ளர்பயம் ஆனாலும் தையல்நாயகி
கலங்கவே விடமாட்டாள் தையல்நாயகி

மணமுடிக்கக் கேட்டுக் கொண்டால் தையல்நாயகி
மங்களமாய் முடித்து வைப்பாள் தையல்நாயகி
மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல்நாயகி
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல்நாயகி

மாடுமனை வீடுசுற்றும் தையல்நாயகி நீ
மனதுவைத்தால் வளரும் அம்மா தையல்நாயகி
காடுகரை தோப்புவயல் தையல்நாயகி
உன்கண்பட்டால் பொன்விளையும் தையல்நாயகி

அம்மா என்றே உனை அழைத்தால் தையல்நாயகி
ஆறுதலே பிறக்குதம்மா தையல்நாயகி
தாயே என்றுஉனை அழைத்தால் தையல்நாயகி
நோய் நொடிகள் நீங்குதம்மா தையல்நாயகி

பேறுபெறச் செய்தவளே தையல்நாயகி-எங்கள்
பிள்ளைகளைக் காக்கவேண்டும் தையல்நாயகி
தொல்லை எல்லாம் நீக்கவேண்டும் தையல்நாயகி-வாழ
நல்லவழி காட்டவேண்டும் தையல்நாயகி

கம்பூன்றி நடைநடந்து தையல்நாயகி-உன்னை
காணவே வருகின்றேன் தையல்நாயகி
தெம்புண்டு மனதினிலே தையல்நாயகி திவ்ய
தெரிசனமே தரவேண்டும் தையல்நாயகி

செய்யும் தொழில் சிறக்க வேண்டும் தையல்நாயகி
செல்வ வளம் பெருகவேண்டும் தையல்நாயகி
ஆறுநூறு ஆகவேண்டும் தையல்நாயகி-அதில்
ஆனந்தமே பொங்கவேண்டும் தையல்நாயகி

சங்கொலி முழங்கவேண்டும் தையல்நாயகி-என்
சந்ததியும் சிறக்கவேண்டும் தையல்நாயகி
மங்களமே பொங்கவேண்டும் தையல்நாயகி-என்றும்

மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் தையல்நாயகி
அம்மா என்றே உனை அழைத்துத் தையல்நாயகி
அடிபணிந்தேன் உந்தன்பிள்ளை தையல்நாயகி
என்னகுறை எனக்கினிமேல் தையல்நாயகி

எனக்குத்துணை நீஇருக்கத் தையல்நாயகி
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஓம் சக்தி ஓம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 1 =

Most Popular