வராகம் பிருதிவிக்கு சத்தியரூபன் வரலாற்றைக் கூறியது. இமயமலைக்கு வடபால் சத்தியரூபன் தவம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் மரத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கும்போது ஒரு விரல் வெட்டப்பட்டு விட்டது. அதிலிருந்து புகை வந்தது. குருதியில்லை. மேலும் அறுந்த விரலை அதன் இடத்தில் வைத்திட மறுபடியும் ஒட்டிக்கொண்டது.
சத்தியதபனின் ஆசிரமம் அருகில் ஒரு கின்னர தம்பதியர் இருந்தனர். சத்தியதபனின் சக்தியை கின்னர தம்பதிகள் இந்திரனிடம் தெரிவித்தனர். அவருடைய பெருமையை, சக்தியை சோதிக்க இந்திரனும், விஷ்ணுவும் அவரிடம் வந்தனர். விஷ்ணு அம்பால் அடிக்கப்பட்டு உடலில் அம்பு செருகி இருக்க சத்தியதபரின் ஆசிரமத்தினருகில் ஒரு பன்றி திரிய ஆரம்பித்தது. இந்திரன் வேடன் வடிவில் அங்கு வந்தடைந்தான். அவன் சத்திய தபரிடம் தான் ஒரு பன்றி மீது அம்பெய்தியதாகவும், அது தப்பி ஓடி வந்ததாகவும், அதனைக் கொன்றால் தான் தன் குடும்பம் வாழும் என்று கூறினான்.
சத்தியதபன் ஒரு குழப்பத்தில் சிக்கினான். பன்றியைக் காப்பாற்றுவதா? வேடனின் குடும்பத்தைக் காப்பாற்றுவதா? என்று குழம்பி, சிந்திக்க ஆரம்பித்தான். கண்கள் பார்க்க பேச அல்ல, வாய் பேச பார்க்க அல்ல தன் கண்கள் பன்றியைக் கண்டன. ஆனால் அது பற்றி அதனால் சொல்ல முடியாது; வாயினால் வராகம் பற்றிக் கூறுவதென்றால் வாய் வராகத்தைக் காணவில்லை. எனவே அவன் வேடனாக வந்த இந்திரன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மவுனம் சாதித்தான். அவனுடைய முடிவை அறிந்த விஷ்ணுவும், இந்திரனும் தமது உண்மை வடிவைக் காட்டி சத்தியதபனை வாழ்த்தினர். சத்திய தபனும் அவனது குரு அருணியும் முத்தியடைந்து பிரம்மனுடன் ஒன்றினர்.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!