வராஹ புராணம் – பகுதி 19 – கத்ருவும் வினதையும்

407

நாகபஞ்சமி பாம்புகள் பூசைக்கு உகந்த நாள். பால் வார்த்து பூசிப்பது வழக்கம். பிரம்மா எல்லா விஷப் பாம்புகளையும் உண்டாக்கினார். அவற்றுள் அனந்தன், வாசுகி, கார்க்கோடகன், பதுமன், மகாபத்மன், கம்பனன் ஷங்கன், குளிகன், பாபா, ரஜிதா, மற்றும் அபராஜிதா. இந்தப் பாம்புகள் மக்களை அழித்து வரவே, தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிரம்மா பாம்புகளைக் கூப்பிட்டு, “நீங்கள் மற்ற உயிர்களை அழிப்பதால், நீங்கள் உங்கள் தாயாராலேயே அழிக்கப்படுவீர். உங்கள் உயிர்கள் அழிக்கப்பட்டு விடும்” என்றார். அப்போது பாம்புகள் “எங்களுக்கு விஷமும், கடிக்கும் குணமும் உங்களாலேயே கொடுக்கப்பட்டன. நாங்கள் எவ்வாறு அதற்குக் காரணமாவோம்? எனவே எங்களுக்குக் கருணை காட்டுங்கள். நாங்கள் வாழ்வதற்காக ஒரு தனி இடம் ஏற்பாடு செய்யுங்கள்.” அதன்படி அவை பாதாள, விதல, சுதல லோகத்தில் வசிக்க ஆணையிட்டார்.
பாம்புகளிடம் பிரம்மா அடுத்த கல்பத்தில் காச்யப முனிவருக்கும் அவள் மனைவி கத்ருவுக்கும் குழந்தைகளாகப் பிறப்பீர்கள் என் வரமளித்தார். கத்ருவும், வினதையும் தக்ஷணது புத்திரிகள். காசியப முனிவரை மணந்தனர். கத்ரு காசியபரின் வரம் வேண்டி ஆயிரம் விஷமுள்ள பாம்புகளைப் பெற்றாள். வினதை, கத்ருவின் குழந்தைகளை விட சக்திவாய்ந்த இரண்டு குழந்தைகளை வேண்டிப் பெற்றாள். அவளுடைய இரண்டு கருவில் ஒன்றை அழிக்க முயல குழந்தை முடமாக பிறந்தது. அதன் பெயர் அருணன். அருணன் சூரியனுக்குத் தேரோட்டி ஆனான். இப்படி அருணனுக்கு ஏற்பட்ட நிலையினால் கோபம் கொண்ட அருணன் தாயைக் கத்ருவின் அடிமையாகப் பல ஆண்டுகாலம் இருக்குமாறு சபித்தான். மேலும் அருணன் வினதையிடம் மற்றொரு கரு நன்றாகப் பிறந்து அதன் தாயை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பான் என்றான்.

உச்சைச்வரசு இந்திரனின் குதிரை. கத்ருவும், வினதாவும் ஒருமுறை அதன் வாலில் நிறம் பற்றி பந்தயம் கட்டினர். வினதா அது வெள்ளை என்றுகூற, கத்ரு அது தவறு. அதன் வால்கருப்பு என்றாள். பந்தயத்தில் தான் தோற்றுவிடும் பயத்தால் கத்ரு தன் குழந்தைகளாகிய பாம்புகளைக் குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டு கருப்பாக தோன்றுமாறு செய்யச் சொன்னாள். உண்மையற்ற தாயின் வார்த்தைக்கு சில பணிய மறுக்க, அவற்றøச் சர்ப்பசத்ர யாகத்தில் அவை அழிக்கப்படும் என்று சபித்தாள் அத்தாய். (பின்னர் ஜனமேஜயன் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் அழிந்தன.) பந்தயத்தில் தோற்றதால் கத்ருவுக்கு வினதை அடிமையாக இருக்க வேண்டி ஏற்பட்டது. வினதைக்கு இரண்டாவதாகக் கருடன் பிறந்தான். பாதி பறவை, பாதி மனித உடல் கொண்டதாயிற்று. கண்களும் நகங்களும் உணவைத் தேடிக் கிழிக்க உதவும் பறவை போல் அமைந்தன. முகம் வெளுப்பாயிருந்தது. இறக்கைகள் சிவப்பு நிறம், உடல் பொன்னிறம். கருடனுக்குச் சர்ப்பங்கள் உணவாகும் என்று பிரம்மா வரம் அளித்தார். பாம்புகள், கருடனிடம் அவன் அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால் அவன் தாயார் விடுதலைப் பெறுவாள் என்றன. நேராக அமிர்தத்தைத் தராமல் குசப்புல் போல் அமிர்தம் இருக்குமாறு உபாயம் செய்ய பாம்புகளுக்கு முன் கரண்டி போன்ற நாக்கு ஏற்பட்டது. அதனால் பாம்புகளுக்கு கருடன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. பாம்புகள் ஆயுள் முடிவு வரை மட்டுமே கடிக்கும். கருட மந்திரம் அறிந்தவர்களை, நல்லவர்களைக் கடிக்காது.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!