Thursday, October 19, 2023
HomePurana Kathaigalவராஹ புராணம் - பகுதி 21 - விரதங்கள்

வராஹ புராணம் – பகுதி 21 – விரதங்கள்

1. சித்திரை – சுத்த (வளர்பிறை) துவாதசியில் வாமனனாகிய நாராயணனை பூசிக்க வேண்டும்.

2. வைகாசி – வளர்பிறை துவாதசி. பரசுராம துவாதசி. பரசுராமரை (நாராயணனை) பூசிக்க வேண்டும்.

3. ஆனி – வளர்பிறை துவாதசி – ஸ்ரீராம துவாதசி – ஸ்ரீ ராமாவதார விஷ்ணு பூஜை.

4. ஆடி – வளர்பிறை துவாதசி. கிருஷ்ண துவாதசி – ஸ்ரீ கிருஷ்ணனைப் பூசிக்க வேண்டும்.

5. ஆவணி – வளர்பிறை துவாதசி. புத்த துவாதசி – ஆபத்திலிருந்து நிவாரணம் பெற இவ்விரதம் செய்யப்படும்.

6. புரட்டாசி – வளர்பிறை துவாதசி – கல்கி துவாதசி – கல்கி அவதார விஷ்ணு பூசை.

7. ஐப்பசி – வளர்பிறை துவாதசி – பத்மநாப சுவாமியைப் பூசித்தல்.

8. கார்த்திகை – வளர்பிறை துவாதசி. விஷ்ணு பிரீதிக்கான வழிபாடு. இது பதிதபாவன தரணி துவாதசி. வராகம் பூமியை ரக்ஷித்தது.

9. மார்கழி – வளர்பிறை துவாதசி – மச்ச துவாதசி – மச்சாவதார நாராயணன் பூஜை.

10. தை – வளர்பிறை துவாதசி. கூர்ம துவாதசி – கூர்மாவதார விஷ்ணு பூஜை.

11. மாசி – வளர்பிறை துவாதசி – சர்வபாப விமோசனம் – வராக மூர்த்தி பூஜை.

12. பங்குனி – வளர்பிறை துவாதசி – நரசிம்ம துவாதசி. நரசிம்மர் பூஜை.

காந்தி விரதம் : கார்த்திகை துவிதியை திதியில் வளர்பிறையில் செய்யப்படுவது. கிருஷ்ணன் (அ) பலராமனைப் பூசித்து வெள்ளி சந்திரன் பதுமைகளைத் தானம் செய்தல்.

அவிக்கின விரதம் : திரிபுரசுரர்களைக் கொல்வதற்கும் முன் சிவபெருமானும், கடலை ஆசமனம் செய்வதற்கு முன் அகஸ்தியரும் இந்த விரதத்தை அனுஷ்டித்தனர். விரதத்தின் பகுதியாகப் பங்குனி மாதம் சதுர்த்தசி திதி அன்று கணேசன் மீது மந்திர உச்சாடனம் செய்வது நலம்.

காம விரதம் : தை மாதம் சுக்கில பக்ஷ பஞ்சமி திதியில் கந்தன் வழிபாடு சிறப்புடையது. முதன்முதலில் இதனை நளன் அனுஷ்டித்தான்.

சாந்தி விரதம் : கார்த்திகை சுக்கில பக்ஷ பஞ்சமி திதியில் சாந்திவிரதம் அனுஷ்டிக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி சாந்தி ஏற்படும். ஓர் ஆண்டுக்கு சூடான உணவைத் தவிர்க்க வேண்டும். முடிவில் சேஷன் பாம்பு வடிவ பிரதிமையை தானம் கொடுக்க வேண்டும்.

ஆரோக்கிய விரதம் : ஆரோக்கிய விரதத்தின் மூலம் மன்னன் அனரண்யன் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட தொழுநோய் நீங்கியது.

புத்ரேஷி விரதம் : சூரசேன மன்னனுக்குப் புத்திர பாக்கியம் அளித்த விரதம் இது. யசோதை மடியில் தவழும் கிருஷ்ணனைத் தியானித்துப் பாலும், தயிரும் தானமாகத் தரவேண்டும்.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

Most Popular