திருமலையில் வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை…

1170

ஶ்ரீமன் நாராயணனின் அருள் பரிபூரணமாக திருமலையில் வியாபித்துக் இருப்பதால்தான் திருவரங்கத்துக்கு இணையாகப் ‘பூலோக வைகுண்டம்’ என பக்தர்கள் அழைக்கிறார்கள். திருப்பதியில் வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட வரலாற்றைப் பார்ப்போம்.
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் சாந்த மூர்த்தி யார்? என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பிய பிருகு முனிவர் முதலில் பிரம்மனின் அவைக்கு வந்தார்.
பிரம் மன் தேவாதி தேவர்களுக்குத் தர்ம உபதேசம் செய்து வந்ததால், பிருகு முனிவர் கவனிக்கவில்லை. அதனால், அவரை சபித்து விட்டு, கயிலாயம் சென்றார். அங்கும் முனிவ ரை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில் லை கோபத்துடன் பிரம்மாவுக்கும் சிவனுக்கும் சாபம் கொடுத்துவிட்டு, வைகுண்டத்துக்கு வந்து சேர்ந்தார்.
அங்கோ மகா விஷ்ணு மோகனப் புன்னகையு டன் கண்கள் மூடிய நிலையில் படுத்திருந்தார். லட்சுமிதேவி அவரது திருவடிகளைப் பிடித்த வண்ணம் இருந்தார். இங்கும் தன்னைக் கண்டு கொள்ளாத பரந்தாமனின் செயலால் கோபம் கொண்ட பிருகு முனிவர், பரந்தாமனி ன் நெஞ்சிலே உதைத்தார்.
ஆனால், நாராயணமூர்த்தியோ பிருகு முனிவ ரின் செயலுக்குக் கோபப்படாமல், ‘எங்கே தன்னை உதைத்ததால் முனிவரின் திருவடிக ள் வலிக்குமோ’ என்று நினைத்து, முனிவரின் கால்களை இதமாகப் பிடித்து விட்டார்.
மூன்று உலகங்களிலும் சாந்தமானவர் மகா விஷ்ணுவே என்று மகிழ்ந்த பிருகு முனிவர் அவரை வாழ்த்திவிட்டுச் சென்றார். ஆனால், பிருகு முனிவர் உதைத்த மகா விஷ்ணுவின் இடது மார்பில் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி அல்லவா? அவள் பிருகு முனிவரின் செயலால் கடும்கோபம் கொண்டாள்.
”என்னதான் மகரிஷி உங்களுக்கு அடியவரெ ன்றாலும் நான் வாசம் செய்யும் பரந்தாமனின் நெஞ்சில் உதைத்த பிருகு முனிவரின் பாதத் தை நீங்கள் பற்றியதை நான் சிறிதும் விரும்ப வில்லை. அதனால், உங்களை.பிரிந்து செல்ல போகிறேன் என்று கூறி, திருப்பதிக்கு அருகே இருக்கும் கொல்லாபுரம் வந்தடைந்தார்.
மகாலட்சுமி தன்னை விட்டு பிரிந்ததால் பொலி விழந்த நாராயணும் சீனிவாசனாக, அவதரித்து திருமலை முழுவதும் மகாலட்சுமி யை தேடி அலைந்து திரிந்தார். அப்படி அவர் திருமலை முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது, ஒருநாள் வகுளாதேவி (கிருஷ்ணாவதாரத்தில் இவரே யசோதை) அவரைப் பார்த்தாள்.
அவரிடம், ”அப்பனே, நீ யார்? ஏன் இந்தக் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டாள்.
”குழந்தையற்ற எனக்கு நீயே குழந்தை”…
அதற்கு பதிலளித்த நாராயணன், ”அம்மையே நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி. எவ்வளவோ துன்பங்கள் அனுபவத்து நான் இம்மலையை அடைந்தேன். எனக்குத் துணை என்று யாருமி ல்லை. என்னை ஆதரிப்பாரும் யாருமில்லை. உங்களையே நான் என் தாயாக கருதுகிறேன். இதைவிட இப்போதுள்ள என் நிலையில் ஒன்றும் கூறுவதற்கில்லை” என்றார்.
இதைக் கேட்டதும், வகுளாதேவியின் கண்களி லிருந்து தாரைதாரையாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
”குழந்தாய், உன்னைப்போல நானும் திக்கற்ற வள். இந்த மலையில் வராகமூர்த்தியைத் தரி சித்துக்கொண்டு காலம் கடத்தி வருகிறேன். அவரது கருணையால் நீ என்னிடம் வந்து சேர்ந்தாய். குழந்தையற்ற எனக்கு நீயே குழ ந்தை. உன்னை என் கண்மணி போல் காப்பா ற்றுவேன். என்னைவிட்டு நீ பிரியக் கூடாது” என மிக அன்புடன் வேண்டிக்கொண்டாள்.
சீனிவாசன் புன்னகை செய்தார். ”அம்மையே! இன்றுதான் நான் பாக்கியசாலியானேன். வா யார ‘அம்மா’ என அழைக்கும் வாய்ப்பு எனக்கு இன்றுதான் கிட்டியது. நீங்கள்தான் என் தாய். உங்களைவிட்டு எங்கும் செல்ல மாட்டேன்” எனக் கூறினார்.
வகுளா தேவி ஆனந்தம் அடைந்தாள். கானகத் தில் கிடைக்கும் கனி வகைகள் கொண்டு வந்து சீனிவாசனுக்கு உணவூட்டி பெற்ற தாயைப்போல் நேசித்தாள்.
திருப்பதி மலைக்கு அருகில் நாராயணபுரம் எனும் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சுதர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவ ன் முதுமையடைந்ததும், தன் மூத்தமகன் ஆகா சராஜனுக்கு முடிசூட்டி வைத்துவிட்டு, தவம் புரிய காட்டுக்குச் சென்றுவிட்டான்.
ஆகாசராஜன் மிகவும் அறநெறி உடையவன். நாட்டை மிகவும் செம்மையாக ஆட்சி புரிந்து வந்தான். தன் நாட்டு மக்களைத் தன் கண்க ளைப்போல் நேசித்துக் காத்து வந்தான்.
ஆகாசராஜன் தரணிதேவி தம்பதிக்கு பிள்ளை யில்லா குறை. அதைப்போக்க புத்திரகாமே ஷ்டி யாகம் செய்ய விரும்பினான். யாகத்து க்கான இடத்தை, பொன்னேர் பூட்டி, உழுது செம்மைப்படுத்தினான். அப்படி உழும்போது அந்தப் பொன்னேர் பூமியில் பதிந்திருந்த ஓர் அழகான பெட்டியின் மீது இடித்தது. உடனே அந்த பெட்டியை அரசன் வெளியே எடுத்தான். அந்த பெட்டியில் அழகான ஒரு குழந்தையுடன் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையும் இருந்தது.
அங்குக் கூடியிருந்த அவையோர் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அப்போது வானத்தி ல் ஓர் அசரீரி கேட்டது, ”மன்னா! நீ பெரும் பா க்கியசாலி! இன்றுதான் உன் விருப்பம் பலித் திருக்கிறது. இந்தக் குழந்தையை எடுத்து வள ர்த்து பெரியவளாக்கு. இந்தக் குழந்தையால் உங்கள் குலம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று புனிதமடையும்”என்று கூறியது.
மன்னன் அந்தணர்களை வரவழைத்து நல்ல நாள் பார்த்து அந்தக் குழந்தைக்குப் பெயரிடும் படி வேண்டினான். அவர்கள் நன்கு யோசித்த பின்னர், திருமகளே பத்மத்தில் (தாமரையில்) கிடைக்கப் பெற்ற காரணத்தால், `பத்மாவதி’
(அலர்மேல் மங்கை) எனப் பெயர் சூட்டினர்.
திருமகளே தமது வீட்டில் வந்து பிறந்துவிட்ட தாக, அரசனும் அரசியும் சந்தோஷம் அடைந்த னர். தனக்கு கிடைத்த மகளை அருமை பெரு மையாக வளர்த்து வந்தனர். உரிய காலத்தில் தன் மகள் பத்தாவதிக்கும், சீனிவாச பெருமா ளுக்கும் திருமணம் செய்துவைத்தனர். அதன் பிறகு கலியுகத்தில் மக்கள் படும் துன்பங்க ளை களைவதற்காக, சீனிவாசப்பெருமாள் திருமலையில் சிலாரூபமாகப் பக்தர்களுக்கு அருள் புரிய எழுந்தருளினார்.
பின்னர் சோழமன்னன் தொண்டைமான், தேவ லோகச் சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியு டன் பெருமாளுக்குக் கோயில் ஒன்றை எழுப்பி னார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அரு ளாட்சி செய்கிறாள்…
ஓம் நமோ வேங்கடேசாய…