Sunday, October 29, 2023
HomeSlogamமூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்

மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்

சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
_ திருமூலர் திருமந்திரம்

சற்று மேலே உள்ள திருமந்திரம் பற்றி சிந்திப்போம்.

முதல் வரி

“சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்”
ஆதாவது, முப்பிறவியின் தீய வினை செய்து இப்பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர் நாவில் “சிவ சிவ” என்ற சொல் வராது…

இரண்டாம் வரி

“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும”
அவ்வாறு பாவ செய்யல் செய்து வருபவர் “சிவ சிவ” என்று சொல்லிவிட்டால்…. அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களை பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.

மூன்றாம் வரி

“சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்”
இவ்வாறு பாவங்கள் செய்ய விடாமல்,…. நன்மைகள் பல புரிய செய்து.. . தேவர்கள் ஆவார்கள்.

நாலாம் வரி

“சிவ சிவ என்னச் சிவகதி தானே”
தேவர்கள் ஆன பின்… “சிவ சிவ” என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒடுங்கும்

அது சரி மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம் எப்படி… ?

இந்த திருமந்திரத்தில் 9 முறை ‘சிவ’ என்று வருகிறது.
ஒரு நிமிடத்தில் 4 ங்கு முறை எளிதில் கூறமுடியும்… அப்படி என்றால் 3ன்று நிமிடத்தில் 12 முறை கூறியிருப்பிர்…
12 முறை x 9 சிவ = 108 சிவ அஷ்டோத்திரம் சொல்லியிருப்போம்.

திருச்சிற்றம்பலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =

Most Popular