அரிய, அற்புதமான ஸ்தோத்ரம்.

244

பக்ஷி க்ருத ராமஜெய ஸ்தோத்ரம்
ஓம் ஸ்ரீமஹா கணபதயே நமஹ
பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சீதா தேவியுடன் அயோத்தியில் ஆனந்தமாய் ஆட்சி செய்த காலத்தில், அங்கிருந்த பக்ஷிகள் அவர்களுக்கு ஜெயம் உண்டாக துதித்த அரிய, அற்புதமான ஸ்தோத்ரம்.
1. ஜயது ராகவோ ஜானகீயுதோ ஜயத்வகில ராஜராஜேஸ்வர:
தசரதாத்மஜோ லக்ஷ்மணாக்ரஜோ ஜயது மாபதிஸ் தாடிகாந்தக:
பொருள்: சீதா தேவியுடன் கூடிய ராஜா ராகவருக்கு ஜெயம் உண்டாகுக! சகல ராஜாதி ராஜர்களுக்கும் தலைவனாக விளங்குபவரும், தசரதனின் புதல்வனாகவும், லக்ஷ்மணனின் மூத்த சகோதரராகவும் விளங்குபவரும், தாடகையை வதம் செய்தவருமான ஸ்ரீராமருக்கு ஜெயம் உண்டாகுக!
2. ஜயது கௌசிகஸ்யாத்வரம் கதோ ஜயது ரக்ஷஸாம் மாரகோ மஹான்
ஜயது கௌதமஹல்யயா ஸ்துதோ ஜயது ஜானகி தாத மானித:
பொருள்: விஸ்வாமித்திரரின் யாகத்தை ரக்ஷிக்க சென்று, ஆங்குள்ள ராக்ஷஸர்களை நாசம் செய்ததுடன், அகலிகையை பெண்ணாக்கி அவரது கணவர் கௌதம மகரிஷியாலும் தோத்திரம் செய்யப்பட்டு, மிதிலா நகரஞ் சென்று, ஜனகரால் உபசரிக்கப் பட்டவருமான ஸ்ரீராமருக்கு ஜெயம் உண்டாகுக!
3. ஜயது ந: பதிச் சாப கண்டனோ ஜனகஜா வரோன்முக்த மாலயா
ந்ருப ஸபாங்கணே கௌசிகானுக: பரமசோபிதச் சாதிஹர்ஷித:
பொருள்: சிவ தனுசை முறித்து சீதா தேவிக்கு மாலையிட்டு சகல அரசர்களும் புகழ விஸ்வாமித்திரரை பின் தொடர்ந்து வந்த ஸ்ரீராமருக்கு ஜெயம் உண்டாகுக!
4. ஜயது பூமிஜாங்க்ரயோஸ் ததா முதா நிஜகரோத்பலே ஸ்தாப்ய ராகவ:
கமல ஹஸ்தகேனாகரோன்னதிம் ஸ ரகுநந்தன: பாது ந: ஸுகம்
பொருள்: சீதையின் தாமரை மலர் போன்ற பாதங்களை தமது கரங்களில் வைத்து தாமரை போன்ற கரங்களால் அஞ்சலி பந்தம் செய்த ராகவர் நம்மை சுகமாய் காப்பாற்றுவாராக!
5. ஜயது பூமிஜாலிங்கிதோ மஹான் ஜன மனோஹரச் சாதிசோபன:
பரசுராமதம் த்ருத்ய வை தனுர் நிஜபிதுஸ் ததா அதர்ச்யத் பலம்
பொருள்: சீதா தேவி ஆலிங்கனம் செய்வதற்கு அழகு வாய்ந்தவரும், பிரகாசமானவரும், பரசுராமர் தந்த தனுசை வளைத்து பிதாவுக்கு தமது பலத்தை வெளியிட்டவருமான ஸ்ரீராமருக்கு மங்களம்!
6. ஜயது ஸீதயா போகக்ருச் சிரம் ஜயது கைகேயீ ப்ரேரிதோ வனம்
ஜயது பர்வதே வாஸக்ருச் சிரம் ஜயதி யோ அத்ரிணா பூஜிதோ வனே
பொருள்: சீதா தேவியுடன் சில காலம் ஆனந்தமாய் இருந்து, கைகேயியின் ஏவலினால், வனம் சென்று பல காலம் மலையில் வாசம் செய்து கொண்டிருந்தவரும், வனத்தில் அத்ரி மகரிஷியால் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீராமருக்கு ஜெயம் உண்டாகுக!
7. ஜயது ஸ விராதஸ்ய காதக்ருத் ஜயது தூஷணாதி பிரமர்த்தன:
ஜயது யோ ம்ருகம் மோசயத் பவான் ஜயது ய: கபந்தம்
பொருள்: விராதன், தூஷணன் முதலியவர்களை கொன்று மான் வடிவு கொண்ட மாரீசனை சம்சார சாகரத்திலிருந்து கரையேறும் படி செய்து, க்ஷண நேரத்தில் கபந்தனையும் கொன்ற ஸ்ரீராமருக்கு ஜெயம் உண்டாகுக!
8. ஜயது வாலிஹா சேதுகாரகோ ஜயது ராவணாதி மாந்தக:
ஜயது ஸ்வம் பதம் ப்ராப ஸீதயா மங்கல ஸ்னானக்ருன் முதா
பொருள்: வாலியை வதைத்து, கடலில் அணை கட்டி, ராவணன் முதலிய அசுரர்களை வதம் செய்து சீதா தேவியுடன் தமது நகரத்தை அடைந்து மங்கள ஸ்நானம் செய்து கொண்டவருமான ஸ்ரீராமருக்கு ஜெயம் உண்டாகுக!
9. ஜயது வாக்யதோ பூஸுரஸ்ய ய: ஸகல பூதலம் பர்யடன் சிரம்
ஜயது யாகக்ருத் லோகசிக்ஷயா ஜயது ஜானகீ ரஞ்ஜயன் ஸ்தித:
பொருள்: பிரம்மனின் வாக்யத்தால் பூமியில் வெகு காலம் சஞ்சரித்து, சீதா தேவியுடன் உலக நன்மைக்காக யாகங்களை செய்து சுகமாக விளங்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகுக!