Saturday, October 28, 2023
HomeSlogamபணக்கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோகம்!

பணக்கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோகம்!

வேலை கிடைக்கவும் பணக்கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல வழிபாட்டு ஸ்லோகங்கள்!

வேலை இல்லை என்றாலும் கூட கையில் காசு, பணம் இல்லாமல் இருந்தால் எந்த கஷ்டமும் தெரியாது. வேலையும் இல்லை கையில் காசு பணமும் இல்லை என்றால் உலகத்தில் இல்லாத கஷ்டம் நமக்கு இருப்பதாக தோன்றும்.

ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் இல்லை என்று அர்த்தம். அத்தகைய வீடுகளில் அஷ்டமங்கல வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு 8 வகைப் பொருட்களை ஒரு பாட்டிலில் (மிட்டாய் டின் போன்ற சீசா) போட்டு அதன் அருகில் கமலதீபம் இரண்டை ஏற்றி வைத்து மனமுருகி வழிபட்டால் கஷ்டங்கள் மறைந்து வளம் உண்டாகும்.

அஷ்டமங்கலப் பொருட்கள் விவரம் வருமாறு:

1.குண்டு மஞ்சள்-மூன்று

2.குங்குமம்,

3.மரப்சீப்பு,

4.தர்ப்பணம் என்ற கண்ணாடி,

5.சந்தனம்,

6.தாம்பூலம்,

7.தீபம்,

8.ரவிக்கைத் துணி (பச்சை நிறம்).
இரண்டு பக்கங்களிலும் கமலதீபங்களை ஏற்றி நடுவில் ஒரு தட்டில் சீசாவை வைத்து
ஓம் லட்சுமி நம ஓம்
ஸ்ரீதேவி நம ஓம்
கமலாசனி நம ஓம்
பத்ம பூஜனி நம ஓம்
மகாதேவி நம ஓம்
சங்கமாதா நம ஓம்
சக்ர மாதா நம ஓம்
கதா மாதா நம ஓம்
ஐஸ்வர்னய நம

ஆகிய ஒன்பது திருமகள் நாமங்களை எட்டு முறைகள் கூற வேண்டும். பிறகு ஆத்ம பிரதட்சிணம் (தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல்) செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பணக்கஷ்டம் தீரும். லட்சுமியின் பார்வை பட்டு குடும்பத்தில் செல்வம் பெருகும்.

வேலை கிடைப்பதற்கு சொல்ல வேண்டிய ஸ்ரீ லட்சுமி ஸ்லோகம்:

ஸ்ரீ லட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும், கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் காலை 10 முறை சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ||

ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ|||

வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீ லட்சுமி பூஜை செய்து 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லி வர விரைவில் வேலை கிடைக்கும். அதோடு காசு, பணமும் கூடும் என்பது ஐதீகம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 16 =

Most Popular