Tuesday, October 24, 2023
HomeSlogamசிவபெருமானே அரிய மா ஒளியே பக்தி துதி

சிவபெருமானே அரிய மா ஒளியே பக்தி துதி

சிவபெருமானுக்கு உகந்த இந்த பக்தி துதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். வேண்டுதல்கள் படிப்படியாக நிறைவேறும்.

அரிய மா ஒளியே அற்புதனே சரணம் சரணம்
அருள் சுரக்கும் தெய்வமே ஆதியே சரணம் சரணம்
அனுகூலம் செய்பவனே ஆரமுதே சரணம் சரணம்

அன்புள்ள அப்பனே ஆரூரானே சரணம் சரணம்
அற்புத உருவே ஆதியே ஜோதியே சரணம் சரணம்
அறவழி காட்டுவோனே ஆலவாயனே சரணம் சரணம்
இணையில்லாத் துணையே ஈங்கோய்மலை தேவனே சரணம்
இரக்கம் மிகுந்தவனே ஈடில்லா ஈசனே சரணம் சரணம்
இனிமை தருபவனே இமயத்தில் இருப்பவனே சரணம் சரணம்
இன்பத்தின் இன்பமே இன்னல் தீர்ப்பவனே சரணம் சரணம்
எமையாளும் ஈசனே ஏற்றமளிப்பவனே சரணம் சரணம்
எங்குமுன் திருவருள் எளியவனே சரணம் சரணம்
எகாம்பரநாதனே என்குணசீலனே சரணம் சரணம்
ஏகாந்தவாசனே ஏட்டுமானூர் அப்பனே சரணம் சரணம்
கதியே காருண்யனே கடுத்திருத்தி அப்பனே சரணம் சரணம்
புனிதனே பெரியோனே பெருவுடையாரே சரணம் சரணம்
வையகம் காக்கும் வைக்கத்து வள்ளலே சரணம் சரணம்
சிக்கல் தீர்ப்பவனே சிவகுருநாதனே சரணம் சரணம் சரணம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + nine =

Most Popular