பௌமாஸ்வினி ஸ்பெஷல் ! தேவர்களின் ஸ்துதி

144

தே3வா ஊசு: ||
நமோ தே3வ்யை மஹா தே3வ்யை சி’வாயை ஸததம் நம : |
நம: ப்ரக்ருத்யை ப4த்3ராயை நியதா: ப்ரணதாஸ்மதாம் ||
தேவர்கள் கூறியது:-
தேவிக்கு நமஸ்காரம். மஹா தேவிக்கு நமஸ்காரம். மங்கள வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம். இயற்கை என்கின்ற வடிவானவளுக்கு நமஸ்காரம். மங்கள ஸ்வரூபிணியான அன்னையை அடக்க ஒடுக்கமாக நாங்கள் வழிபடுகின்றோம்.
ரௌத்3ராயை நமோ நித்யாயை கௌ3ர்யை தா4த்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்நாயை சேந்து3ரூபிண்யை ஸுகா2யை ஸததம் நம: ||
பயங்கர வடிவை உடைய தேவிக்கு நமஸ்காரம். நித்தியமானவளுக்கு நமஸ்காரம். கௌரிக்கு நமஸ்காரம். உலகையே தாங்குபவளுக்கு நமஸ்காரம். ஒளி வடிவானவளுக்கு நமஸ்காரம். சந்திரப்பிரபையை போன்ற தேவிக்கு நமஸ்காரம். இன்ப வடிவானவளுக்கு என்றென்றும் எங்கள் நமஸ்காரம்.
கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்3த்யை ஸித்3த்4யை குர்மோ நமோ நம : |
நைர்ருத்யை பூ4ப்4ருதாம் லக்ஷ்ம்யை ச’ர்வாண்யை தே நமோ நம : ||
சரணமடைந்தோருக்கு எல்லா நலன்களுமாகத் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும், மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரம். புவியாளும் அரசருக்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவனின் பத்தினிக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரங்கள்.
து3ர்கா3யை துர்க3பாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை |
க்யாத்யை ததை2வ க்ருஷ்ணாயை தூ4ம்ராயை ஸததம் நம: ||
கஷ்டங்களைக் கடக்க உதவும் துர்க்கை வடிவினளும், அனைத்தின் சாராம்சம் ஆனவளும், அனைத்தயுமே ஆக்குபவளும், கியாதி வடிவினளும், கரிய நிறத்தவளும், புகை வடிவினளும் ஆன தேவிக்கு என்றென்றும் நமஸ்காரம்.
அதிஸௌம்யாதி ரௌத்3ராயை நாதாஸ் தஸ்யை நமோ நம : |
நமோ ஜக3த்ப்ரதிஷ்ட்டா2யை தே3வ்யை க்ருத்யை நமோ நம : ||
இனிய வடிவினை உடையவளும், பயங்கர வடிவினை உடையவளும் ஆகிய தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். உலகின் ஆதாரமாகவும், உலகின் இயக்கமாகவும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வ பூ4தே ஷு விஷ்ணு மாயேதி ச’ப்3தி3தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் விஷ்ணு மாயை என்று கூறப்படுகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு சேதநேத்யபி4தீ4யதே |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சைதன்ய வடிவினள் என்று கூறப்படுகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு புத்3தி4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் புத்திவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு நித்3ராரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நித்திரைவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு க்ஷுதா4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பசிவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச்சா2யாரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பிரதி பிம்பவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச’க்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறை கின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு த்ருஷ்ணா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் வேட்க்கையின் வடிவில் உறைகின்றாளோ , அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு க்ஷாந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பொறுமையின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்
யாதே3வி ஸர்வபூ4தே ஷு ஜாதி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜாதியின் வடிவில் உறைகின்றாளோ,அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு லஜ்ஜா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நாணத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு சா’ந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சாந்தி வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச்’ரத்3தா4 ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சிரத்தையின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு காந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் காந்தியின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு லக்ஷ்மீ ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் செல்வத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு வ்ருத்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜீவனோபாயம் என்னும் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு ஸ்ம்ருதி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஞாபக சக்தியின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு த3யா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் இரக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு துஷ்டி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் திருப்தியின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு மாத்ரு ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் தாயின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதே3வி ஸர்வபூ4தே ஷு ப்4ராந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் மயக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
இந்த்3ரியாணாமதி4ஷ்டாத்ரீ பூ4தானாஞ்சாகி2லே ஷுயா |
பூ4தே ஷு ஸததம் தஸ்யை வ்யாப்திதே3வ்யை நமோ நம: ||
எந்ததேவி இந்திரியங்களை ஆள்பவளாக, எல்லா உயிர்களிடத்தும், எல்லப் பொருட்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ; அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
சிதிரூபேண யா க்ருத்ஸனமேதத் வ்யாப்ய ஸ்திதா ஜக3த் |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை|| நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்ததேவி இந்த உலகம் முழுவதிலும் சைதன்யவடிவினளாக வியாபித்து நிற்கின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.