தேவி நமஸ்கார துதி

516

தேவிக்கு உகந்த இத்துதியை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பாராயணம் செய்தால் உடல் வலிமை பெறும்.

யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நமஹ

பொதுப்பொருள்: எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப்படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப்படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப்படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.