மரண பயம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

163

மரண பயம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

கர்ம வினைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பிறவியும் எடுத்து வருகிறோம். அந்தந்த பிறவிகளில் அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கப் பெறுகிறோம். இவ்வளவு ஏன், பிறக்கும் போதே கூட கண் பார்வை இழந்தோ, கை, கால்கள் இல்லாமலோ, நோயோடும் பிறக்கும் நிலை கூட உண்டாகிறது. அப்படி பிறந்த பிறகு இதனால் நாம் இறந்துவிடுவோமா என்ற அச்சம் ஏற்பட்டால் சொல்ல வேண்டிய மந்திரம் தான் இது. மரண பயம், தீராத நோய் தீரவும், உடல் ஆரோக்கியம் ஏற்படவும், தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கவும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

மரண பயம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே

சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்

உருவாருகமிவ பந்தனாத்

ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்

தினந்தோறும் காலை எழுந்தவுடன் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். முதலில் ஆரம்பத்தி 3 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகு தினந்தோறும் சொல்ல ஆரம்பித்தால் 11 முறை சொல்ல வேண்டும். அதற்கும் மேலும், நீங்கள் சொல்லலாம். ஆனால், ஒரு போதும் தவறாக உச்சரிக்கவே கூடாது.

உங்களால் இந்த மந்திரத்தை சொல்ல நினைத்தால் சொல்லலாம். இல்லையென்றால் யூடியூப் வீடியோவில் இந்த மந்திரத்தை போடலாம். உடல் ஆரோக்கியம் சரியாகவும், தீராத நோய் தீரவும், உடலில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுவிட்டது, நாம் இறந்து விடுவோமா என்ற மரண பயம் ஆகியவற்றை விரட்டும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

தீராத நோயால் அவதிப்பட்டு வந்து மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டும் பலன் இல்லையென்றாலும், இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்த பிறகு மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை சாப்பிட்டால் உடனே பலன் கிடைக்கும்.

இவ்வளவு ஏன் மந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வரும் போது ஒரு துன்பம் கூட உங்களை நெருங்காது. எந்த துன்பம் உங்களை நோக்கி வந்தாலும் அது தானாகவே விலகிவிடும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.