ஸ்ரீ குரு பகவானின் அருள் பெற சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!
அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம்
தத்பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 1
அஜ்ஞானதிமிரான்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜனஶலாகயா
சக்ஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 2
குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணுஃ குருர்தேவோ மஹேஶ்வரஃ
குருரேவ பரம்ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 3
ஸ்தாவரம் ஜம்கமம் வ்யாப்தம் யத்கிம்சித்ஸசராசரம்
தத்பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 4
சின்மயம் வ்யாபியத்ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம்
தத்பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 5
த்ஸர்வஶ்ருதிஶிரோரத்னவிராஜித பதாம்புஜஃ
வேதான்தாம்புஜஸூர்யோயஃ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 6
சைதன்யஃ ஶாஶ்வதஃஶான்தோ வ்யோமாதீதோ னிரம்ஜனஃ
பின்துனாத கலாதீதஃ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 7
ஜ்ஞானஶக்திஸமாரூடஃ தத்த்வமாலாவிபூஷிதஃ
புக்திமுக்திப்ரதாதா ச தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 8
அனேகஜன்மஸம்ப்ராப்த கர்மபன்தவிதாஹினே
ஆத்மஜ்ஞானப்ரதானேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 9
ஶோஷணம் பவஸின்தோஶ்ச ஜ்ஞாபணம் ஸாரஸம்பதஃ
குரோஃ பாதோதகம் ஸம்யக் தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 10
ன குரோரதிகம் தத்த்வம் ன குரோரதிகம் தபஃ
தத்த்வஜ்ஞானாத்பரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 11
மன்னாதஃ ஶ்ரீஜகன்னாதஃ மத்குருஃ ஶ்ரீஜகத்குருஃ
மதாத்மா ஸர்வபூதாத்மா தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 12
குருராதிரனாதிஶ்ச குருஃ பரமதைவதம்
குரோஃ பரதரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ 13
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பன்துஶ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ 14
நவக்கிரங்களின் ஒருவரான ஸ்ரீ குரு பகவானை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இத்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்வது மிகவும் நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தை வைத்து, குரு பகவானின் படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். மேலும் விளக்கில் 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம்.
நன்மைகள் கிடைக்க குரு ஸ்தோத்திரத்தைப் பாட வேண்டும். நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான் ஆவார் . வியாழக்கிழமை அன்றும், குருப்பெயர்ச்சியின் பொழுதும் இந்த குரு ஸ்தோத்திரம் பாடி வழிபட்டால் அவரது அருள் மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம். குருவே நீ பார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும் என்பார்கள்! திருவருள் இணைந்தால் நாளும் திருமணம் வந்து கூடும்! பொருள்வளம், கல்வி வளர்ச்சிப் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.
