குருவின் ஆசீர்வாதத்தை பெற, சொல்ல வேண்டிய மந்திரம்

319

தினம் தோறும் நாம் வீட்டில் இருந்தே நம்முடைய குருவுக்கு நன்றி தெரிவிக்க என்ன மந்திரத்தை உச்சரிக்கலாம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக எந்த பெரியவர்களை பார்த்தாலும் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது மிகவும் நல்ல ஒரு விஷயம்தான். vetrilai-pakku-pazham ஜாதகத்தில் இருக்கும் குரு தோஷத்தை கூட, குருவின் ஆசீர்வாதத்தால் போக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பல மகத்துவங்களைக் கொண்ட உங்களுடைய, குருவிற்கு நீங்கள் தினந்தோறும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால், இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். உங்களுக்கான குரு மந்திரம் இதோ..

ஓம் நமோ வந்தே குரு பரம்பராம்!

தினம்தோறும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நெய்தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய குருவை மனதார நினைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்து, குருவிற்கு நன்றி தெரிவித்து, அந்த நாள் பொழுதை தொடங்கிப் பாருங்கள்! குருவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து, அந்த நாள் முழுவதும் சிறப்பாக செல்வதை உணர முடியும்.