என்னதான் கருத்தொன்றி படித்தாலும் சிலருக்கு பாடம் மனதில் பதியாது.. அப்படியே படிந்தாலும் சிலருக்கு விரைவில் பாடம் மறந்து போகும். அப்படிப்பட்ட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுதான்..
வசதி வாய்ப்புகள் இருந்தும், அறிவு இருந்தும் சில பிள்ளைகள் கவன சிதறல்கள் இருக்கும். என்னதான் கருத்தொன்றி படித்தாலும் சிலருக்கு பாடம் மனதில் பதியாது.. அப்படியே படிந்தாலும் சிலருக்கு விரைவில் பாடம் மறந்து போகும். அப்படிப்பட்ட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுதான்.. தினசரி காலையும் மாலையும் விளக்கேற்றி கீழ்க்காணும் மந்திரத்தினை மாணவர்கள் சொல்லிவர தகுந்த பலன் கிடைக்கும்
ஸ்லோகம்..
ஜ்ஞானா நந்தமயம் தேவம்
நிர்மலஸ் படி காக் ருதம்
ஆதாரம் ஸர்வ வித்யா நாம்
ஹயக்ரீ வமு பாஸ் மஹே.
பொருள்…
ஞானம்(அறிவு),ஆனந்தம் இவற்றிகெல்லாம் இருப்பிடமாகத் திகழ்பவரும்,ஸ்படிகத்தைப் போன்று நல்ல நிர்மலமாக ஒளிர்பவரும்,சகல கலைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் ஸ்ரீஹயக்ரீவரை வணங்குவோம்.
இம்மந்திரத்தினை மனம் ஒன்றி சொல்லிவர படிப்பில் கவனம் கூடும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்..