இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் பணக்கஷ்டம் தீரும்

312

கீழே கொடுக்கப்பட்டுள்ள மகாலட்சுமி மந்திரங்களை தினமும் ஒரு முறை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.

குபேரர் அவர்கள் அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை நினைத்து துதித்தார். அதனால் மகாலட்சுமி தேவி அவருக்கு ஆசி வழங்கி, குறையாத செல்வம் நிலைக்க வரம் அளித்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரங்களை சொல்லி மகாலட்சுமி தேவியைத் துதித்து அவரின் ஆசியுடன் செல்வ வளத்தை பெறலாம்.

“ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வ துர்க்க ஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”

நான் மகாலட்சுமிக்கு தேவிக்கு வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் அனைத்து வலி மற்றும் துயரங்களையும் அகற்றிடுவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

“ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”

தாயே, நீங்கள் மிகப்பெரிய சக்தியாக உள்ளீர்கள், நீங்கள் மகிழ்ச்சிக்கும் செல்வத்துக்கும் பொறுப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் மிக பெரிய பாவங்களையும் அழித்துவிடவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

“மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா”

இத்தகைய புனிதமான ஸ்தோத்திரத்தை முழு பக்தியுடனும் எப்போதும் எல்லா வகையான திறன்களையும் எல்லா வகையான ஞானத்தையும் தருகிறாய். மேலும், இதை துதிப்பவர்கள் அனைத்து ஆடம்பரமாக பொருட்களையும் சொந்தமாகக் கொண்டிருப்பார் மற்றும் உலக ஆசைகளை நிறைவேற்றுவார்.