கன்னி ராசிக்காரருக்கான கோவிந்தன் துதி

106

கன்னி ராசிக்காரருக்கு உகந்த இந்த கோவிந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீவினைகள் அகலும். மரண பயம் நீங்கும்.

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
நெடியானே ! வேங்கடவா ! நின்கோவி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !