குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் ஸ்லோகம்

563

இந்த ஸ்லோகத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குறைந்த பட்சம் 108 முறை உரு ஜெபித்து வந்தால் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் கணவன் – மனைவி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.

குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் ராதா கிருஷ்ண ஸ்லோகம்
ராதா கிருஷ்ணன்
ராதேஸம் ராதிகாப்ராண
வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம்

ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
ராதானுகம் ராதிகேஷ்டம்
ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம்
ஸர்வாதாரம் நமாமிதம்

கண்ணனாகிய கிருஷ்ணர் மற்றும் அவர் இதய கமலத்தில் வாசம் செய்யும் ராதா தேவியை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மனதில் ராதா – கிருஷ்ணனை நினைத்தவாறு குறைந்த பட்சம் 108 முறை உரு ஜெபித்து வந்தால் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் கணவன் – மனைவி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பிப்பார்கள். பல காரணங்களுக்குகாக ஏற்பட்ட சண்டையால் பிரிந்திருக்கும் உறவினர்களும், நண்பர்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் இருப்பர். பிறருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்களை மன்னித்து மறக்கும் பக்குவம் தோன்றும்.