ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்
ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்
ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்
