பெரியவா பாதம் சரணம்

365

அனாத ரட்சகா!
ஆபத் பாந்தவா!
அரண் அடைந்தோம்
அச்சம் நீக்கி
அபயம் அளிப்பாய்.

காஞ்சி வாஸா!
கருணா ஸாகரா!
காலடி வணங்கினோம்
கஷ்டம் நீக்கி
காத்தருள்வாய்.

சத்குரு நாதா!
சங்கரா!
சரண் புகுந்தோம்
சங்கடம் நீக்கி
சாந்தம் அளிப்பாய்.

தர்ம ரக்ஷகா!
தீன சரண்யா!
தாள் பணிந்தோம்
துயரம் நீக்கி
தயை புரிவாய்.

பக்த வத்ஸலா!
பரம தயாளா!
பாதம் பற்றினோம்
பாதகங்கள் நீக்கி
பரிவுடன் காப்பாய்.