மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவந ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம் ஸஞ்ஜீவ ஸரதஸ் ஸதம்
*பொருள் :*
*மாங்கல்யம் தந்துனானே*
( இந்த மங்கல நாணை )
*மம ஜீவந ஹேதுநா*
( என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாக இருப்பவளே )
*கண்டே பத்நாமி*
( உன் கழுத்தைச் சுற்றி அணிவிக்கிறேன் )
*ஸுபகே*
( மிக சிறந்த குணநலன்களை கொண்டவளே )
*த்வம் ஸஞ்ஜீவ ஸரதஸ் ஸதம்*
( நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் )
*( த்வம் – நீ*
*ஸஞ்ஜீவ – வாழ்க*
*ஸரதஸ் – ஆண்டு*
*ஸதம் – நூறு )*
*விளக்கம் :*
*மங்களகரமான பெண்ணே உன்னோடு இன்று நான் துவங்கும் இந்த இல்லற ( வாழ்வு ) தர்மம் ஆனது நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதி அளித்து புனிதமான இந்த திருமாங்கல்யத்தை ( மங்கல நாணை ) உன் கழுத்தில் அணிவிக்கிறேன் நீ எனது இல்லத் துணைவியாக எனது சுக துக்கங்களில் சரிபாதியாக பங்கேற்று நிறைந்த போகத்துடன் நீ நூறாண்டு வாழ்வாயாக*
