Friday, October 20, 2023
HomeSlogamதிருமணம் நடக்க உதவும் மந்திரம்!

திருமணம் நடக்க உதவும் மந்திரம்!

திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்!

இன்றைய காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை வண்ணகி கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் திருமணத் தடை விலகும்.

மந்திரம்:

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருத

ராகு கால வேலையில் இரண்டு எலுமிச்சம் பழத்தை சாரதிபதியாக வெட்டி அதில் உள்ள சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின் அந்த வெட்டிய எலுமிச்சையை கொண்டு துர்கை அம்மனுக்கு மூன்று விளக்குகள் ஏற்ற வேண்டும். அதோடு பிழியப்பட்ட எலுமிச்சை சாறில் தேனும் சக்கரையும் கலந்து அதை துர்கை அம்மனுக்கு படைக்கவும். அதன் பிறகு மேலே குறிப்புட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். இதன் மூலம் திருமண தடைகளை அனைத்தும் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.

வீட்டில் உக்கிர சாமிப்படங்களை வைக்கலாமா?

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்த்திர கருத்துக்கள் உள்ளன.
விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.

(ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது). வைக்கக்கூடாத படங்கள் – (உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது.
(உக்கிர தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்)

மேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.

நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது. ஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.

சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ சக்ரம், மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்கலாகாது. சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =

Most Popular