வாழ்வில் உயர்வு பெற வாழ உதவும் மந்திரம்!
விநாயக மந்திரம்
1.க்ஷிப்ர கணபதி :-
ஓம்|கம் க்ஷிப்ர ப்ரசாதனாய நமஹ||
இதனை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியங்கள் காலதாமதமின்றி விரைவில் முடியும்.
2.ஹேரம்ப கணபதி:-
ஓம் கூம் நமஹ||
இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மனச்சாந்தி உண்டாகும்.
3.நிதிகணபதி:-
ஓம் |வக்ரதுண்டாய ஹூம்||
இதனை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கும் தேவைகள் நிறைவேறத் தேவைப்படும் தனம் தடையின்றி வரும் .
4.சங்கஷ்டஹர கணபதி :-
ஓம் |நமோ ஹேரம்ப |மதமோதித|மம சர்வ சங்கஷ்டம் நிவாரய|ஹூம் பட் ஸ்வாஹா||
இதனை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும். இதனை சங்கடஹரசதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) அன்று ஆரம்பித்து செய்யவேண்டும். வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது அதனால் தோஷம் உண்டாகும், பல பிரச்சனைகள் வரும். கிருஷ்ண பரமாத்மாவே அவ்வாறு பார்த்ததனால் பல சங்கடங்களை அனுபவித்தார். மேற்கண்ட கணபதி வழிபாட்டை தேய்பிறை சதுர்த்தியில் செய்து தன மனக்கவலை நீங்கப் பெற்றார். நீங்களும் இதை செய்து துன்பம் நீங்கிய வளவாழ்வை வாழுங்கள்.
5.கடன் தீர கணபதி வழிபாடு:-
கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம்.
ருணஹர கணபதி:-
ஓம் |கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்|
ருஊநாசன கணபதி:-
ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா|
இதனை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மலையளவு கடனும் விரைவில் தீரும். கடன் பட்டவர்கள் செவ்வாய் கிழமை மதியம் 12:00 – 1:30 மணிக்குள் கடன் தொகையில் சிறிதளவாவது திரும்ப செலுத்தினால் கடன் விரைவில் தீரும். புதன் கிழமை கடனை திரும்பச் செலுத்தக் கூடாது அவ்வாறு செலுத்தினால் கடன் அடையாது கூடிவிடும். கிருத்திகை, கேட்டை, பூராடம் நட்சத்திரத்தன்று கடனை திரும்பச் செலுத்த, அடகு வைத்த பத்திரம், நகை இவைகளை மீட்க திரும்பவும் கடன் வாங்கும் அடகு வைக்கும் சூழ்நிலை வராது.
6.அர்க்க கணபதி:-
ஒம்|நமோ கணபதயே|அர்க்க கணபதே|வரவரத சர்வஜனம் |மே வசமானய ஸ்வாஹா|
இதனை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர சூர்யன் மற்றும் நவக்ரஹ சாந்தி உண்டாகும். அதாவது நவகிரகங்களால் உண்டான தோஷம் விலகும்.
7. அபீஷ்டவரத கணபதி:-
ஓம்|ஸ்ரீம் ஸ்ரீம் கணாதிபதயே |ஏகதந்தாய |லம்போதராய|ஹேரம்பாய|நாளிகேரப்ரியாய|மோதக பக்ஷணாய|மமாபீஷ்ட பலம் தேஹி |ப்ரதிகூலம் மே நச்யது |அனுகூலம் மே வசமானய ஸ்வாஹா|
இதனை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியம் சித்தியாகும்.தொடர்ந்த ஜெபத்தின் பலனாக தொட்ட காரியம் எல்லாம் சிறந்து விளங்கும்.
