பாவங்களை போக்கும் முருகனின் பாமாலை!
ஆதி மூல முருகா -முருகா ஆதி தேவ முருகா.
ஞான பால முருகா – முருகா ஞான தேவ முருகா
கோவில நாடி வந்தேன் முருகா – குறைகள் தீர்க்க வருவாய் -உன்
மலையை நாடி வந்தேன் முருகா – மனமிரங்கி வருவாய்.- பல
படிகள் ஏறி வந்தேன் முருகா பரிவடைந்து வருவாய்
கிரியிலேறி வந்தேன் முருகா பெரிய வாழ்வு தருவாய்
கவிகள் படி வந்தேன் முருகா கருணை ஒன்று தருவாய் – பல
துதிகள் பாடி வந்தேன் முருகா துணைவனாகி வருவாய்.
மயில் அழைக்க வந்தேன் முருகா மனமகிழ்ந்து வருவாய்.
கொடியழைக்க வந்தேன் முருகா குணமறிந்து வருவாய்.
அடிமையாகி வந்தேன் முருகா அதிபனாகி வருவாய்.-உன்
அருமை கண்டு வந்தேன் முருகா அகமகிழ்ந்து வருவாய்.
வினைகள் நீங்க வந்தேன் முருகா வேவெடுது வருவாய். -என்
பவமழிக்க வந்தேன் முருகா பதமளிக்க வருவாய்.
மது மணக்கும் மலரே முருகா மனமிருக்கும் ஒளியே.
அதிசயத்தின் உருவே முருகா அருண ஞான குருவே.
வேத நாத ஒளியே முருகா வேத போத முடிவே.
வேத போத முடிவே முருகா வேத கான வடிவே.
காலமற்ற கலையே முருகா கருவமற்ற நிலையே.
கனமயூர மணியே முருகா கௌரி தந்த கனியே.
அன்னை தந்தை ஆனாய் முருகா அரிய செல்வம் ஆனாய்.
என்னை ஆளும் முருகா – முருகா உன்னை என்றும் மறவேன்.
அன்பர் ஒங்க வேண்டும் முருகா அவனி ஒங்க வேண்டும்.
துன்பம் நீங்க வேண்டும் முருகா இன்பம் ஒங்க வேண்டும்.
தர்மம் ஒங்க வேண்டும் முருகா தானம் ஒங்க வேண்டும்.
தவமும் ஒங்க வேண்டும் முருகா சாந்தி ஒங்க வேண்டும்.
பக்தி ஒங்க வேண்டும் முருகா சக்தி ஒங்க வேண்டும்.
சக்தி ஒங்க வேண்டும் முருகா சித்தி ஒங்க வேண்டும்.
அன்பர் கூட வேண்டும் முருகா துதிகள் பாட வேண்டும்.
துதிகள் பாட வேண்டும் முருகா நீயும் ஆட வேண்டும்.
மயிலும் ஆட வேண்டும் சேவல் கொடியும் ஆட வேண்டும்.
அயிலும் ஆட வேண்டும் முருகா அரவம் ஆட வேண்டும்.
உமையும் ஆட வேண்டும் முருகா உலகம் ஆட வேண்டும்.
தமையன் ஆட வேண்டும் உனது தந்தை ஆட வேண்டும்
ஞான ஜோதி மயமே எங்கும் நாம கீதா மயமே.
நாம கீதா மயமே எங்கும் முருகன் நாம மயமே.
