ஸ்ரீ வடிவேலழகனின் ஆயிரம் திருநாமங்கள்

340

ஓம் அகஹராய நமஹ.
பாபங்களை அகற்றுபவருக்கு நமஸ்காரம்.
ஓம் அக்ரகண்யாய நமஹ.
யாவற்றிலும் முதன்மையானவருக்கு நமஸ்காரம்.
ஓம் அத்ரிஜாஸுதாய நமஹ.
மலைமளின் மைந்தருக்கு நமஸ்காரம்.
ஓம் அனந்தமஹிம்நே நமஹ.
அளவற்ற மஹிமை உடையவருக்கு நமஸ்காரம்.
ஓம் அபராய நமஹ.
எல்லையற்றவருக்கு நமஸ்காரம்.
கருணை,அருள் புரிவதில் எல்லையற்றவன்.
ஆட்கொள்வதிலும்,வழங்குவதிலும், வீரத்திலும் எல்லையற்றவன்.
ஓம் அனந்த ஸெளக்யப்ரதாய நமஹ.
அளவற்ற சுகம் அளிப்பவருக்கு நமஸ்காரம்.
” இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே
இகபர செளபாக்யம் அருள்வாயே” என்கிறார் அருணகிரியார்.
ஓம் அவ்யயாய நமஹ.
அழிவற்றவருக்கு நமஸ்காரம்.
முருக பக்தர்கள் பல சோதனைகள் கண்டாலும் இறுதியில் அழிவற்ற முருகனின் குறைவற்ற அருளால் அனைத்தும் சாதனைகளாக மாறி அழிவற்ற இன்பத்தை அடைவர்.
ஓம் அனந்தமோக்ஷதாய நமஹ.
முக்தியை அளிப்பவருக்கு நமஸ்காரம்.

“பக்தியால் யான் உன்னைப் பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முக்தியே சேர்வதற் கருள்வாயே” என்கிறார் அருணகிரியார்.
ஓம் அனாதயே நமஹ.
தோற்றமில்லாதவருக்கு நமஸ்காரம்.
சிவனிடமிருந்து தோற்றமில்லாமல் தீப்பொறியாய் வெளிப்பட்ட கந்தனை நாம் எந்த ரூபத்தில் தியானிக்கிறமோ அந்த தோற்றத்தில் காட்சியளிப்பார்.
ஓம் அப்ரமேயாய நமஹ.
அளவிட முடியாதவருக்கு நமஸ்காரம்.
முருகனின் அழகு, கருணை, ஞானம், வீரம் என்று அனைத்துமே அளவிட முடியாதது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா !!