அன்பினால் அகிலம் எல்லாம் அணைத்திடும் சிவனே சரணம்!
அருளினால் இருளை நீக்கும் ஒளிதரும் இறைவா சரணம்!
மருவியே உயிர் அனைத்தும் சீவனாய் நிறைந்தாய் சரணம்!
துயர் படும் நிலையில் என்னை தூக்கிய தூயோன் நீயே
கண்ணெதிர் முன்னே வந்து அருளது தந்தோன் நீயே
மனவுடல் உயிரில் எல்லாம் கலந்திட்ட நாதா நீயே
நானது நீயதென்று பிரிவில்லா பிரானும் நீயே
வாழ்வது உள்ள மட்டும் ஆல்நிழற்குரவா ஐயா உன் தாளதே சரணம் சரணம்!