பூச்சொரிதல் நிறைவு

534

அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்த கோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சபைக்கு மங்களம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபம் ஏற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்க என்று சந்ததம் கொண்டாடுவோம்.

சங்கரி சங்கரன் தேவி மனோஹரி
சந்த்ர கலாதரி அம்பிகையே
எங்கும் நிறைந்த உன் இணையடியை
தொழும் பேறு எனக்கே அருள் பைரவியே
மரகத ச்யாமள ரூபிணியே
மஹிஷாஸுர பார்வதியே
பரமேச்வரி ஜகதாம்பிகையே
மங்களமே தந்து
எங்களைக் காத்திட
மனமுவந்தே உடன் வருவாயே
ஐங்கரனைப் பெற்ற அன்னையே
உன்னையே நம்பிடும் எம்மையே காப்பாயே

ஓம் சக்தி ! பராசக்தி !