பூச்சொரிதல் ஸ்பெஷல் !

157

பத்திரி பட்டவிடம் பாவம் பறந்தோடுமம்மா
விபூதிபட்ட தக்ஷணமே வினைகள் பறந்தோடுமம்மா
பஞ்சா க்ஷரம்பட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும்
பத்தென்றா லிரண்டறியேன் பாலனம்மா வுன்னடிமை
எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை
நாகத்தின் கண்ணேயம்மா நல்லவிடப் பாம்பே
சேஷத்தின் கண்ணேயம்மா சின்னவிடப் பாம்பே
பாம்பே தலைக்கணைதான் வேப்பிலையோ பஞ்சுமெத்தை
வேப்பம்பாலுண்டவளே வேதாந்த மாரிமுத்தே
ஐந்நூறு பாம்புனக்கு அள்ளியிட்ட வீரசடை
வீரசடை மேலிருந்து விமலியரே கொஞ்சுமம்மா
முந்நூறு சந்தி முதற் சந்தி யுன்னுதென்றாய்
நானூறு சந்தி நடுச்சந்தி யுன்னுதென்றாய்
சந்திக்குச் சந்தி தனிச்சந்தி யுன்னுதென்றாய்
வீதிக்கு வீதி வெளிச்சந்தி யுன்னுதென்றாய்
பட்டத் தழகியம்மா படைமுகத்து ராஜகன்னி
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே
திருவிளக்கு நாயகியே தேவிகன்ன னூராளே
மணிவிளக்கின் மேலிருந்து மாதாவே கொஞ்சுமம்மா
விளக்கிற் குடியிருந்து மெல்லியரே கொஞ்சுமம்மா