புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

166

புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.

காமநாசனாய சுத்த கர்மணே நம:
சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம:
சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

பொருள்: தன்னலம் கருதாது செய்யப் படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு, ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் ஸெளக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் ஸெளக்கியமுற்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.