சொந்த வீடு கட்ட வேண்டுமா? அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க

707

வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமும், முயற்சியும் உங்கள் மனதில் உள்ளதா? அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

சொந்த வீடு கட்ட வேண்டுமா? அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க
அங்காரகன்
“ஓம் அங்காரகாய நம”

பூமிக்கு சொந்தக்காரர் என்றால் அது செவ்வாய் கிரகத்தை குறிக்கிறது. செவ்வாயின் மற்றொரு பெயர் அங்காரகன். செவ்வாய்க் கிழமை தோறும் நவக்கிரகம் உள்ள கோவிலுக்குச் சென்று, நவகிரகங்களில் ஒருவரான செவ்வாயின் முன்பு மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

செவ்வாய் பகவானுக்கு உகந்த செவ்வாழைப்பழமும், அரளிப்பூயையும் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும். மந்திரத்தை மனதார உச்சரித்து, உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை அந்த செவ்வாய் பகவானிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கி நிச்சயம் உங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும்.