Sunday, October 15, 2023
HomeSlogamசொந்த வீடு அமைந்திட பாட வேண்டிய திருப்புகழ் பதிகம்!!!

சொந்த வீடு அமைந்திட பாட வேண்டிய திருப்புகழ் பதிகம்!!!

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!
புந்தி நிறை அறிவாள! உயர்தோளா !
பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீச வடிவேலா
தண்மரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப !
தண்தமிழன் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + twenty =

Most Popular