வரலக்ஷ்மி அம்மனை அழைக்கும் போது பாட வேண்டிய பாடல்
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
கனக வ்ருக்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
தினகரன் கோடி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
குங்கும பூவாய் பங்கயப் பாவை
வேங்கடரமனின் பூங்கொடி வாராய்
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய்
அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர
விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லக்ஷ்மி வாருமம்மா…
வரலக்ஷ்மி காயத்ரி மந்திரம் :
பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
வக்ஷஸ்தலஸ்த்திதே
வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
சதேஹிமே
வரலக்ஷ்மி விரததன்று, வரலக்ஷ்மி அம்மனை அலங்கரித்து வஸ்திரம் சாற்றி புஷ்பங்கள் தூவி, விளக்கேற்றி பூஜை செய்து இந்த வரலக்ஷ்மி அம்மனின் பாடலை பாடி அதன் பிறகு சர்க்கரை பொங்கல் மற்றும் வடை நெய்வேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால் நம் இல்லத்தில் வரலக்ஷ்மி குடி கொண்டு சகல சொபாக்கியங்களையும் தந்தருள்வாள்.
