சொந்த வீடு வாங்க, கட்ட நினைப்பவர்கள் பாட வேண்டிய திருப்புகழ்

167

சொந்த வீடு கட்ட அல்லது வாங்கும் பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் பாட வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகத்தை இங்கு பார்ப்போம்.

நம்மில் பலரின் கனவாக இருக்கக் கூடியது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தான். அதற்காக பல கஷடமான வேலையைப் பார்த்து, செலவைக் கட்டுப்படுத்தி பணத்தை சேர்த்து மனை வாங்கி வீடு கட்ட முயற்சி செய்வர். ஆனால் சில காரணங்களுக்காக அந்த பாக்கியம் ஏற்படாமலே தள்ளிப்போகும். அப்படி சொந்த வீடு கட்ட அல்லது வாங்கும் பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் பாட வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகத்தை இங்கு பார்ப்போம். இந்த பதிகத்தை தினமும் பாடி வர நமக்கான சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு அமையும்.

திருப்புகழ் பதிகம்

அண்டர்பதி குடியேற (சிறுவை-சிறுவாபுரி)

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே

அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக

மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண

மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!
அறிவாள! உயர்தோளா !