ஸூர்யோபராககாலே ச ஆதௌ புண்யப்ரஸம்ஸநம் |
சந்த்ரோபராகஸமயே அந்தே ஸர்வஹிதம் பவேத் ||
ஸ்நானம் தானம் ஜபம் ஹோமம் ஸம்போர்யஜனம் உத்தமம் |
ஸூர்ய க்ரஹணத்தின் முற்பகுதி மிகவும் போற்றுதற்குரிய புண்ய காலம்.சந்த்ர க்ரஹணத்தின் பிற்பகுதி அனைத்து நன்மைகளையும் பயக்கக்கூடியது.இந்த காலங்களில் ஸ்நானம்,
தானம்,ஜபம்,ஹோமம்,சிவ பூஜை முதலியவற்றை செய்வது மிகவும் உத்தமம்.
– ஸ்லோகம் 12 – 13 (உபராகோத்சவ படலம், உத்தர காரணாகமம்)
கிரஹண புண்ய காலத்தில் நாம ஸங்கீர்த்தனம் செய்வது பெரிய அளவில் பலனைக் கொடுக்கும்.
கிரஹண புண்ய காலத்தில் செய்யும் நாம கீர்த்தனம் மற்ற நாள்களில் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்துவிடும் நாம அபராதங்களைப் போக்கும்.
எனவே அனைவரும் கிரஹணபுண்யகாலத்தில் அவரவர் இருக்கும் இடத்திலிருந்து மஹாமந்திர கீர்த்தனம் செய்து குருவருளுக்கும் இறையருளுக்கும் பாத்திரமாகும்படி வேண்டுகிறேன்.
ஹரே ராம
ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண
ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண
ஹரே ஹரே
