கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய ஸ்ரீ சரஸ்வதி கவசம்!
சரஸ்வதி தேவியின் சிறப்பு:
பிரம்மா உலகைப் படைக்கின்றபோது அவரது உடல் இரு கூறுகளாகப் பிரிந்து ஒரு பகுதி ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் மாறுகின்றது. அந்தப் பெண்ணே சரஸ்வதி என்று சில புராணங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவி பிரம்மாவின் நாவில் தோன்றியவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
தேவிபாகவதத்தில் சரஸ்வதி தேவியானவள் சாத்வீக குணமுடையவள், மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவள் என்றும், அணிகலன்கள் சூடி கைகளில் சுவடியும், வீணையும் ஏந்தியவள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில் கலைவாணியானவள் பாடலில் உறைபவள், ஒலியில் உறைந்திருப்பவள், இசையில் கலந்திருப்பவள், அறிவின் உறைவிடம், நினைவின் உறைவிடம், சகல கல்விக்கும் சொந்தமானவள், மொழி மற்றும் எழுத்தின் வடிவானவள் என்றும் விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த வடிவு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று புராணங்கள் கூறுகின்றன. “அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்” என்கிறது கந்தபுராணம். சரஸ்வதியைப்பற்றி தமிழில் “சரஸ்வதி அந்தாதி” எனும் நூலைக் கம்பரும், “சகலகலாவல்லி மாலை” என்ற நூலைக் குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், செளரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.
சரஸ்வதி தேவி கவசம்:
சரஸ்வதி என் தலையைக் காக்க!
வாக்கின் தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
விரசு பகவதி கண்ணைக் காக்க!
நாசி விமலை வாக்வாதினியாள் காக்க!
வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க!
உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க!
மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க!
வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க!
எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க!
வித்யா திருஷ்டாத்மா
என் மார்பில் இருந்து காக்க!
எழுத்து வித்யா ரூபிணி
என் நாபி காக்க! வாணி கரம் காக்க!
எல்லா எழுத்தின்
தேவி விழுத்தக என் அடி காக்க!
வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான்
என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க! காக்க!
முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க!
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க!
மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க! காக்க!
புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில்
தங்கியெனைப் புரந்து அருள்க!
மேற்குத் திக்கில் சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க!
துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில்
என்னைக் காக்க! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க! நத்து சர்வ
பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!
அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க!
புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத் திசைகளிலும் இருந்து காக்க! காக்க!
எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க
