ஸ்ரீ மஹாராக்ஞீ श्री महाराज्ञी
அம்பாள் பேரழகு மிக்கவள்.
தானே அரசாள்பவள் ராக்ஞீ. (அரசி) அந்த ராக்ஞீக்களுக்கெல்லாம் ராக்ஞீ (அரசிகளுக்கெல்லாம் அரசி) – பேரரசி – மஹாராக்ஞீ. அதி உன்னதமான ராக்ஞீ.
காத்தல் அரச லக்ஷணம். அரசனும் அரசியும் தனது ராஜ்யத்தில் ஒவ்வொரு இடமாக, கிராமமாக, நகரமாகச் சென்று மக்களின் குறை கேட்டு, அவற்றைக் களைந்து, மக்களுக்கு நிம்மதியான, ஒரு அமைதியான வாழ்வு அளித்தால் அவர்களை மக்கள் அன்புடன் மஹாராக்ஞா (மகாராஜா) மஹாராக்ஞீ (மகாராணி) என்று அழைப்பார்கள்.
நமது அன்னை பராசக்தி மக்களைக் காத்தல் என்னும் தொழிலினால், அவர்களது பக்தியால் மகிழ்ந்து, அவர்களது பிரார்த்தனையை செவிமடுத்து அவர்களுக்கு நன்மை செய்பவளாதலால் அவள் மஹாராக்ஞீ ஆகிறாள்.
அவள் ஸகல ப்ரபஞ்சத்தையும் ஆள்பவள், பரிபாலனம் செய்பவள், அதனால் மஹாராக்ஞீ.
ஓம் ஸ்ரீ மஹாராக்ஞையை நம:
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
