Tuesday, November 7, 2023
HomeSlogamஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பொருள் விளக்கத்துடன்.... த்யான ஶ்லோகம் 1:

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பொருள் விளக்கத்துடன்…. த்யான ஶ்லோகம் 1:

ஸிந்தூ3ராருண விக்3ரஹாம் த்ரிநயநாம் மாணிக்ய மௌலீஸ்புரத் –
தாராநாயக ஶேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்‌ஷோருஹாம் ।
பாணிப்4யாமளிபூர்ண ரத்நசஷகம் ரக்தோத்பலம் பி3ப்4ரதீம்
ஸௌம்யாம் ரத்ந க3டஸ்த ரக்தசரணாம் த்4யாயேத் பராம் அம்பிகாம்।।

சிந்தூரவர்ண (சிவந்த) உடலை உடையவளும், முக்கண்ணுடையவளும், மாணிக்ய மணிகளால் செய்யப்பட்ட கிரீடத்தில் சந்திரனை அணிந்திருப்பவளும், புன்சிரிப்புடைய முகத்தை உடையவளும், புஷ்டியான ஸ்தனங்களை உடையவளும், வண்டு மொய்க்கின்ற தேன் நிறைந்த ரத்னக் கோப்பையையும் செங்குவளைப் பூவையும் இரு கரங்களில் ஏந்தியவளும், ரத்ன கலசத்தில் ரக்த நிறச் சிவப்பான சிவந்த திருவடிகளை வைத்திருப்பவளும், அன்பான தோற்றமுடையவளாகிய பராமம்பிகையை (லலிதாவை) த்யானிக்கிறேன்.

த்யான ஶ்லோகம் 2

அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம்
த்4ருதபாசாங்குச புஷ்பபா4ணசாபாம் ।
அணிமாதி3பி4ராவ்ருதாம் மயூகை: அஹமித்யேவ விபா4வயே ப4வாநீம் ।।

சிவந்த நிறமுள்ளவளும் (இந்த சிவந்த நிறம் காலையில் சூரியன் எழும்போது வரும் சிவந்த நிறம்), கருணை அலைபாயும் கண்களுள்ளவளும், பாசமும் அங்குசமும் பூக்களாக உள்ள அம்புகளைத் தொடுக்கும் வில்லை ஏந்தியவளும், அணிமா முதலிய சக்திகள் கிரணங்களாக சூழ விளங்குபவளுமாகிய பவானியை நான் மனத்தில் பாவிக்கிறேன்.

த்யான ஶ்லோகம் 3

த்4யாயேத் பத்3மாஸனஸ்தாம்
விகஸிதவத3னாம் பத்3ம்பத்ராயதாக்‌ஷீம்
ஹேமாபா4ம் பீதவஸ்த்ராம்
கரகலித லஸத்3தே4ம பத்3மாம் வராங்கீ3ம்
ஸர்வாலங்கார யுக்தாம் ஸததம்
அப4யதாம் ப4க்தநம்ராம் ப4வானீம்
ஶ்ரீவித்3யாம் ஶாந்தமூர்த்திம்
ஸகலஸுரநுதாம்
ஸர்வஸம்பத்
ப்ரதா3த்ரீம்

தாமரையாகிய ஆஸனத்தில் அமர்ந்திருப்பவளும், மலர்ந்த முகம் கொண்டவளும், தாமரை இதழ் போன்று நீண்ட விழிகளையுடையவளும், பொன் போன்ற மேனி நிறமுடையவளும், மஞ்சளாடை அணிந்தவளும், இருகைகளிலும் அலங்கரிக்கும் தங்கத் தாமரைப் பூவை ஏந்தியவளும், அழகிய உருவம் உள்ளவளும், எல்லா ஆபரணங்களையும் அணிந்தவளும், எப்போதும் பயமின்மையை அருள்பவளும், பக்தர்களுக்காக சிரம் தாழ்த்தி குறைகேட்டருள்பவளும், சிவபெருமானது நாயகியும், ஸ்ரீவித்யா ரூபிணியும், சாந்தமான தோற்றமுள்ளவளும், எல்லா தேவர்களாலும் வணங்கப்படுபவளும், எல்லாச் செல்வங்களையும் அளிப்பவளுமான தேவியை நான் த்யானிக்கிறேன்.

த்யான ஶ்லோகம் 4

ஸகுங்கும விலேபனாமளிகசும்பி3 கஸ்தூரிகாம்
ஸமந்த3 ஹஸிதேக்ஷணாம்
ஸஶரசாப பாஶாங்குஶாம் ।
அஶேஷ ஜனமோஹினீம்
அருணமால்ய பூ4ஷாம்ப3ராம்
ஜபாகுசும பா4ஸுராம் ஜபவிதௌ4 ஸ்மரேத3ம்பிகாம் ।।

குங்குமப்பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியில் கஸ்தூரி திலகம் இட்டுக் கொண்டிருப்பவளும், வில்லும் அதற்கு அம்புகளாக பாசம் மற்றும் அங்குசங்களை வைத்திருப்பவளும், மக்களை தன்பால் ஈர்ப்பவளும், செந்நிறத்தில் மாலை, அணிகள் மற்றும் ஆடைகளை அணிந்தவளும் ஆகிய அம்பிகையை ஜப காலத்தில் நான் ஸ்மரிக்கிறேன்.

அம்பிகையின் அருள் கடாக்ஷத்தினால் ஸஹஸ்ரநாமங்களை நாளையிலிருந்து பார்க்கலாம்….

ஸ்ரீ மாத்ரே நமஹ !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 13 =

Most Popular